மகனுக்கு ஆசை ஆசையா பைக் வாங்கி கொடுத்து அதை தீவைத்து காலி செய்த தந்தை.. பாராட்டை பெற்ற காரணம்..

By Ajith V

Published:

முன்பெல்லாம் அப்பா தூரத்தில் வருகிறார் என கூறினாலே உடனடியாக மகன்கள் பயந்து நடுக்கத்தில் ஓடிளிதொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு அப்பா அல்லது அம்மா என பெயரை கேட்டாலே பிள்ளைகளுக்கு ஒருவித பயமும் நடுக்கமும் வந்து விடும். ஆனால் தற்போதெல்லாம் காலம் மாறிய போக்கில் பெற்றோர்கள் தான் தங்களின் பிள்ளைகளை பார்த்து அஞ்சுகின்றனர்.

பள்ளியில் படிக்கும் போதே நினைத்ததை வாங்கி கொடுக்கவில்லை என்றால் விபரீமுடிவை எடுத்து விடுவோம் என மிரட்டவும் செய்கின்றனர். இதனால், பிள்ளைகளை பயந்து அவர்கள் போக்கில் விடுவதை தான் பெற்றோர்கள் வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், சில பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் ஷ்டத்துக்கு அனைத்தையும் செய்து கொடுத்து அவர்களின் வாழ்வை சீரழித்தும் வருகின்றனர். இப்படி பல உதாரணங்கள் இருக்க, மகனின் பைக்கை தீ வைத்து எரித்த தந்தை தொடர்பான செய்தி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மலேசிய நாட்டின் கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர் தான் ஷா ஆலம் (Shah Alam). இவர் தனது மகனுக்காக பைக் ஒன்றை வாங்கி கொடுத்ததாவும் கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கூடம் சென்று வரவும் எளிதாக இருக்கும் என்பதற்காக ஷா ஆலம் தனது மகனுக்கு இந்த பைக்கை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மகனின் நலனுக்காக ஷா ஆலம் இந்த விஷயத்தை செய்தாலும் அவர் நினைத்ததற்கு நேர்மாறாக தான் சில விஷயங்கள் அரங்கேறி உள்ளது. மகன் கஷ்டப்படக்கூடாது என நினைத்து ஷா ஆலம் பைக்கை வாங்கி கொடுத்திருந்தார். ஆனால், அவரது மகனோ பைக் பந்தயத்தில் அதிகம் அடிமையாகி போனதாக கூறப்படுகிறது.

நிறைய பைக் பந்தயத்தில் கலந்து கொண்டு தாமதமாகவும் ஷா ஆலம் மகன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல், தனது பாதுகாப்பு பற்றியும் ஷா ஆலமின் மகன் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. முதலில் விரக்தி அடைந்த ஷா ஆலம், அறிவுரை கூறி மகனை மாற்ற நினைத்துள்ளார்.

ஆனால், தந்தையின் வாக்கை பெரிதாக அவர் எடுத்துக் கொள்ளாமல் போக, பரபரப்பான முடிவு ஒன்றையும் ஷா ஆலம் எடுத்துள்ளார். தான் ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கையே தீவைத்து எரித்த ஷா ஆலம், மகனுக்கு நல்ல பாடத்தை புகட்ட முடிவு செய்துள்ளார்.

தனது மகனின் உயிருக்கு எந்தவித பிரச்சனையும் ஆகிவிட கூடாது என்றும், அவர் மீது ஏதேனும் புகாரில் போலீசார் கைது செய்துவிட கூடாது என்றும் ஷா ஆலம் நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் பைக்கின் பெயரில் தான் தனக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாவும், அதைழிப்பது தான் தீர்வாக இருக்கும் என்றும் ஷா ஆலம் இப்படி செய்துள்ளார்.

தந்தையின் செயலால் மகன் என்ன செய்தார் என்பது பற்றி தகவல்கள் தெரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு தந்தையை தற்போது பலரும் பாராட்டியும் வருகின்றனர்.