1 மில்லியன் சதுர அடி.. உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை இந்தியாவில் கட்டும் அமெரிக்க வங்கி..!

By Bala Siva

Published:

 

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை இந்தியாவில் கட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, இந்தியாவில் பல கிளைகள் வைத்துள்ளது. மிகவும் நம்பகத்தன்மை கொண்ட வங்கிகளில் ஒன்றாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் குருகிராம் பகுதியில் ஒரு மில்லியன் சதுர அடியில் புதிய அலுவலகத்தை கட்ட இருப்பதாகவும், இதுதான் உலகின் மிகப்பெரிய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அலுவலகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்த அலுவலகத்தில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கும், தென் இந்திய மற்றும் வட இந்திய உணவுகள், ஜிம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகள் ஊழியர்களுக்காக செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி, ஓய்வு அறை, பொழுதுபோக்கு அம்சங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல வசதிகள் இந்த கட்டிடத்தில் அமைக்கப்படுகின்றன.

அதேபோல், அலுவலகத்தின் ஒவ்வொரு அறையும் அலங்கரிக்கப்பட்டு, உலக தரத்தில் கட்டப்பட்டு வருவதால், அலுவலகம் திறக்கப்பட்ட உடன் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஊழியர்களுக்கு மருத்துவ உதவிகள், கட்டிடத்தின் உள்ளே மருத்துவமனை, மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்கள்.

குருகிராம் மட்டுமின்றி, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் இதே போன்ற வசதிகளுடன் கட்டிடங்களை கட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.