பொழுதுபோக்கு

விஜய் சார் கூட இனிமே நடிக்க முடியாதுல.. 6 மாதங்களுக்கு முன்பு ஏங்கிய மலையாள நடிகை.. தளபதி69 ல் நடந்த அற்புதம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்யை சுற்றி பல கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடந்து வருகிறது. அவரது திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட கோடிக்கணக்கில் வசூல் செய்வதால் எந்த திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ட்டும் வகையில் தான் அமைந்து வருகிறது.

கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் இதுவும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. ஆனாலும் விஜய்யின் திரை பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறி இருந்த கோட் திரைப்படம், டிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு மத்தியில் தான் நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாற போவதாக அறிவித்திருந்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புது கட்சியை தொடங்கிய விஜய், இன்னும் ஒரே ஒரு படத்துடன் தனது திரைப்பட பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் முழு நேர அரசியலில் ஈடுப உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

விக்கிரவாண்டியில் இந்த மாத இறுதியில் கட்சி மாநாடும் பிரம்மாண்டமா நடத்த உள்ளர். இதனிடையே, விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் பூஜையும் தற்போது நடந்து முடிந்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராக உள்ள இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மலையாள நடிகை மமிதா பைஜூ, ஒரு சில திரைப்படங்களிலேயே இந்தியள்வில் ரசிகர்களை சொந்தமாக்கியவர்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் அளித்த நேர்காணலில் விஜய்யின் திரைப்படம் குறித்து தெரிவித்த கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. “நடிகர் விஜய் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது ஆனால் இனிமேல் அது நடைபெறாது அல்லவா. நான் பலமுறை அவரது திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளேன்.

இப்போது அவர் படங்கள் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதால் நிச்சயம் அவரது ரசிகர்கள் நிறைய பேர் தியேட்டரில் அந்த திருவிழாவை மிஸ் செய்வார்கள். கில்லி படம் முதல் நான் அவரது தீவிர ரசிகை. ஆனால் இனி அந்த கொண்டாட்டங்கள் எல்லாம் இல்லை என்பது நிச்சயம் ஒரு வருத்தமான விஷயம் தான்” என விஜய்யின் திரைப்பம் முடிவுக்கு வருவதை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அப்படி இருக்கையில் தான் விஜயின் கடைசி திரைப்படத்தில் மமிதா பைஜூவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதும் அதிக கவனம் பெற்று வருகிறது.

Ajith V
Ajith V

நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.