இஸ்ரேல் ஈரான் போர் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை என்ன ஆகும்?

By Bala Siva

Published:

 

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, இந்திய பங்குச் சந்தை மிகப்பெரிய அளவில் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இஸ்ரேல் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதை அடுத்து உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தாக்குதலை இஸ்ரேல் புத்திசாலித்தனமாக முறியடித்தாலும், பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக, இரு நாடுகளுக்கிடையே போர் நடந்தால், உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் மோசமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய பங்குச் சந்தையும் மிகப்பெரிய அளவில் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், இன்று காந்தி ஜெயந்தி என்பதால், பங்குச் சந்தை விடுமுறை நிலையில் உள்ளது. நாளை பங்குச் சந்தை திறக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர்.

ஏற்கனவே, நேற்று முன்தினம் சென்செக்ஸ் 1300 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், நாளை பங்குச் சந்தை மேலும் மோசமாக சரிய வாய்ப்பு உள்ளது. இந்திய பங்குச் சந்தை மட்டுமல்ல, உலகளாவிய பங்குச் சந்தைகளும் மோசமாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. பங்குச் சந்தைகள் சரிந்தால், அதன் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.