தமிழ்த்திரை உலகின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் பிரசாந்த். இவருடைய படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். இடையில் அவரது சொந்த பிரச்சனை காரணமாகத் தான் சினிமாவில் பெரிய இடைவெளி விழுந்தது. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாமா…
பிரசாந்த், கிரகலட்சுமி இருவருக்கும்பெரியவர்களால் தேர்வு செய்யப்பட்டு நடத்துன கல்யாணம். தியாகராஜன் வில்லனா நடிக்க ஆரம்பிச்சாரு. கதாநாயகனா நடிக்க முயற்சித்தாரு. ஆனா ஏத்துக்கல. குணச்சித்திர வேடத்துல நடிச்சிருக்கலாம். ஆனா அவர் நடிக்கல.
பிரசாந்த்துக்கு நடிக்கறதுக்கு ஆர்வம் இருந்ததான்னு தெரியாது. ஆனா கதாநாயகனா நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. இன்னைக்கு விஜய் நடித்த கோட் படத்துல ரீ என்ட்ரியைக் கொடுத்தவர் வெங்கட்பிரபு தான்.
அவர் ஒரு ஆண் அழகன். பேசும்போது, சிரிக்கும்போது எல்லாம் அழகா இருக்கும். பெண்களைக் கவரும் வகையில் இருக்கும். அவருக்குப் பொதுமேடை ஒன்றில் ஒரு பெண் ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தம் எல்லாம் கொடுத்துள்ளார்.
அதே நேரம் அவருக்கு அந்தக் காலகட்டத்தில் மூட்டை மூட்டையாக எல்லாம் லவ் லட்டர் வந்ததாம். அந்தவகையில் கிரகலட்சுமிக்கும், பிரசாந்துக்கும் மெல்ல மெல்ல கருத்து வேறுபாடு வர ஆரம்பித்தது. விவாகரத்து பிரச்சனை நீதிமன்றத்துல விசாரணையில் இருக்கும்போதே ஏற்கனவே கிரகலட்சுமிக்கு திருமணம் நடந்து இருப்பது தெரியவந்தது. அதை மறைத்துவிட்டு திருமணம் செய்துள்ளார்கள். அலைபாயுதே படத்தை விட ஒரு படி மேல் என்றே சொல்லலாம்.

திருமணமான பெண் ஒருவள் தாலியை அடையாளப்படுத்தணும். அது ஒரு கம்பீரம். இப்போது சாதாரண சமூகத்தில் கூட தாலியைக் காட்டாமல் ஒரு செயினாகக் காட்டுவது என்று பேஷனாகி விட்டது.
அதன்பிறகு விவாகரத்து சுலபமாக முடிந்து விட்டது. இந்த சம்பவம் பிரசாந்தின் திரைவாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. இன்று விஜய் எப்படி இருக்கிறாரோ அந்த வகையில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்க வேண்டியவர் தான் பிரசாந்த். ஜீன்ஸ் படத்துக்குப் பிறகு எல்லாம் வேற லெவலில் போயிருக்கும்.
பிரசாந்தின் வழக்கு பெரிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம் இவ்ளோ பெரிய ஆளுக்கு எப்படி ஏமாற்றிக் கல்யாணம் நடந்தது என்பது தான். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

