Mahalaya Amavasya: புரட்டாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் மகாளய அமாவாசை. இது முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய நாள்.
மற்ற அமாவாசைகளில் வழிபட முடியாதவர்கள், திதி தெரியாதவர்கள், மறந்து போனவர்கள் என அனைவரும் இந்த மகாளய அமாவாசையில் வழிபட்டால் போதும். ஒரு ஆண்டு முழுவதும் அமாவாசைக்கு முன்னோர்களை வழிபட்ட பலன்கள் கிடைத்து விடும்.
மகாளயபட்ச காலத்தில் வழிபட வேண்டியதைத் தொடர்ந்து வருவது தான் மகாளய அமாவாசை. நாம் இந்த உலகத்திற்கு வரக் காரணமாக இருந்தவர்கள் நம் முன்னோர்கள் தான். அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. அதனால் அவர்களுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டவர்கள் தான்.
மாதத்தில் ஒருநாளாவது நாம் முன்னோர்களை வழிபட வேண்டும். அது தான் அமாவாசை. அப்போது நாம் வழிபட முடியாதவர்கள் இந்த மகாளயபட்ச காலத்தில் விரதம் இருந்து எள்ளும், நீரும் இறைத்தால் போதும். நம் முன்னோர்கள் இந்த 15 திதிகளுக்குள் தான் இறந்து போயிருப்பார்கள். அதனால் நாம் இப்படி செய்வதால் நம் முன்னோர்களுக்கு திதி கொடுத்ததுக்குச் சமம் ஆகும்.
14 நாளும் செய்யவில்லை. இந்த அமாவாசையிலாவது செய்யலாமா என்றால் அவர்களுக்குத் தான் இது வரப்பிரசாதமான நாள். நான் இதற்கு முன் திதி கொடுக்காமல் இருந்தாலோ வேறு ஏதாவது தவறு பண்ணி இருந்தாலோ மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் வம்சம் வாழையடி வாழையாய் தழைத்து ஓங்க எங்களுக்கு முன்னோர்களாகிய நீங்கள் அரணாக இருந்து காப்பாத்துங்கன்னு.
எள்ளும், தண்ணீரும் இறைத்து அந்த நீரையும், எள்ளையும் சிங்க்ல அல்லது கால் படாத இடத்தில் கொண்டு போய் ஊற்றிவிடுங்க. அது முக்கியமாக முளைக்காத இடமாக இருக்கணும். இது காலையில் செய்ய வேண்டிய முதல் வழிபாடு. இது காலை சூரிய உதயத்திற்குப் பிறகு ஆரம்பிக்கணும்.
மதியம் 12 மணி வரை செய்து கொள்ளலாம். அமாவாசை என்ற நாள் முழுவதுமே அமைந்துள்ளது. 2.10.2024 புதன்கிழமை அன்று முழுவதும் அமாவாசை தான். காலை 6 மணி முதல் 12 மணி வரை தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.
இலை போட்டு படையலிடுவதற்கு காலை 11 மணி முதல் 11.45 மணி வரை இலை போட்டுக்கலாம். அதன்பிறகு என்றால் 1.30 மணி முதல் 2 மணிக்குள் இலை போட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளலாம்.
பொதுவாக முன்னோர்களை வழிபட வேண்டும் என்றால் சூரிய உதயத்திற்குப் பிறகு தான். நாம் தர்ப்பணம் கொடுக்கும்போது ஆதித்ய பகவான் இருக்கணும். கோவிலில் தர்ப்பணம் செய்தாலும் ஆதித்யனைப் பார்த்து கும்பிட்டு விட்டு முன்னோர்களைப் பிரார்த்தனை பண்ணிக்கோங்க.
கோவில் போய் கொடுப்பவர்கள் கொடுக்கலாம். இல்லை எனில் ராமேஸ்வரம், திருச்செந்தூர் என தர்ப்பணம் கொடுக்க கடல் இருக்கும் தலங்களுக்குச் செல்லலாம். இந்த அமாவாசை அன்று நம் முன்னோர்கள் எந்த ரூபத்தில் வந்தாவது நம்மை ஆசிர்வாதம் பண்ணுவாங்களாம். அதனால் யாராவது ஒரு ரெண்டு பேருக்கு சாப்பாடு கொடுக்கலாம்.
துணிமணிகள் தாராளமாக வாங்கிக் கொடுக்கலாம். காக்கை, புறா, எறும்பு என எந்த உயிருக்காவது சாப்பாடு கொடுக்கலாம். பெண்கள் அமாவாசை அன்று இலை போட்டு படையலிட்டு வழிபடலாம். அன்னதானம் செய்யலாம். இப்படி செய்தாலே உங்கள் பெற்றோர்கள் கண்டிப்பாக ஆசிர்வாதம் பண்ணுவார்கள்.
கணவர் உயிரோடு இருக்கும் வரை மனைவி எள்ளும், தண்ணீரும் இறைக்கக்கூடாது. முதியோர் இல்லம் சென்று அன்னதானம் கொடுக்கலாம். இது நிச்சயமாகப் பலன் கொடுக்கும் மாலையில் நல்லெண்ணை ஊற்றி ஒரு தீபம் ஏற்றுங்கள். உங்களுக்கு எதெல்லாம் செய்ய வாய்ப்பு இருக்கோ அதை எல்லாம் மறக்காம செய்யுங்கள்.
நீங்க இந்த வழிபாட்டை பக்தியாகவும், சிரத்தையாகவும் செய்து பாருங்கள். நம் முன்னோர்கள் சந்தோஷப்படுவாங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.