அடிக்கடி உடல் சோர்வா? கவலையை விடுங்க… இதை மட்டும் செய்யுங்க..

By Sankar Velu

Published:

சிலரைப் பார்த்தால் எப்போதுமே சோர்ந்து போய் தேமேன்னு இருப்பாங்க. இவர்களை யாருக்கும் பிடிக்காது. ஆனா சிலர் சுறுசுறுப்பாக எப்போதும் பரபரன்னு இருப்பாங்க. அவர்களைத் தான் எல்லாருக்கும் பிடிக்கும். இவங்க இப்படி இருக்குறதுக்கு என்ன காரணம்? ஏன் அடிக்கடி உடற்சோர்வு வருது? வாங்க பார்க்கலாம்.

காலையில் எழுந்ததும் நாம் நல்ல ஒரு நலவாழ்வோடு இருக்கிறோமா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் தூங்கி எழுந்ததும் ஒரு ப்ரஷ்நஸ்ஸைப் பார்க்கறதுல தான் இருக்கு. அப்படி இல்லாம ரொம்ப சோர்வா, டல்லா இருக்கு. உற்சாகமே இல்லன்னாலே உடலிலோ, மனதிலோ ஏதோ ஒரு பிரச்சனை இருக்குன்னு தான் அர்த்தம்.

காலையில் எழுந்ததும் சோர்வு இருக்குன்னா முதல் காரணமா நமக்குத் தூக்கம் சரியில்லன்னு சொல்லலாம். இல்லன்னா தூங்கிய அறையில் நல்ல காற்றோட்டம் இல்லைன்னு சொல்லலாம். ஏதாவது ஒரு காரணத்தால் மன அழுத்தம் இருந்தாலும் தூங்கி எழுந்தம் உற்சாகம் இருக்காது.

குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு அது சரியான தூக்கமாக இருக்காது. தேவையான ஆக்சிஜன் உள்ளே போகாமல் மூச்சுத்திணறலோடு நடந்த தூக்கம். இரும்புச்சத்து குறைவா இருந்தாலும் களைப்பும், சோர்வும் இருக்கும்.

Health
Health

தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பதும் காரணம். ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் முதல் அறிகுறியே சோர்வு தான். உடல் எடை திடீர்னு ரெண்டு மூணு கிலோ குறைந்தால் உடனே போய் சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும். ரத்தக் கொதிப்பும் ஒரு காரணம். காலை எழுந்ததும் தலைபாரமாக இருக்கும். உடனடியாக இந்த ரத்தக்கொதிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்.

எந்தச் சத்துக் குறைவாக இருக்கிறதுன்னு மருத்துவர்கள் சொல்கிறார்களோ அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் இரும்புச்சத்து கல்லீரலைப் பாதிக்கும். உடற்பயிற்சி, பிரணாயாமம் தான் நமது சோர்வைப் போக்கும். காலையில் 45 நிமிடம் நடைப்பயிற்சி கைகளை வீசி நடக்க வேண்டும்.

தொடர்ந்து பிராணாயாமம் செய்தால் எளிதில் உடல் புத்துணர்வு பெறும். சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவில் 40 சதவீதம் பழங்களாக இருக்க வேண்டும். இதுதான் சோர்வைப் போக்கும். மேற்கண்ட தகவல்களை டாக்டர் சிவராமன் பகிர்ந்துள்ளார்.