நடிகர் அஜீத்தை அவர் ரசிகர்களுக்கு நடிகராக மட்டுமன்றி ஒரு கார் பந்தய வீரராகவும் பலருக்கும் பிடிக்கும். நடிக்க வருவதற்கு முன்பாகவே கார் ரேஸில் பங்கு கொண்டு பல போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார். மேலும் பிரபலமான நடிகராக இருக்கும் போதே பார்முலா ஒன் உள்ளிட்ட கார்பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுத்திருக்கிறார் அஜீத்.
கார் ஓட்டுவதில் அதிக பிரியமுள்ள அஜீத் தனது திரைப்படங்களிலும் கார் சேசிங் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து வருகிறார். மேலும் கார் ரேஸில் விபத்துகள் ஏற்பட்டு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். தனது தன்னம்பிக்கையால் மீண்டும் உற்சாகமாகக் களம் இறங்கி சினிமா மற்றும் ரேஸிங் ஆகிய இரண்டிலும் கலக்கி வருகிறார்.
தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங்கின் போது கூட அஜீத் கார் வேகமாக கார் ஓட்டும் வீடியோக்கள் வைரலானது. கார் ஓட்டுவது மட்டுமின்றி துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் சென்னை ஐஐடி மாணவர்களுடன் இணைந்து டிரோன் விமானங்கள் செயலாக்கத்திலும் ஈடுபட்டார். இப்படி விளையாட்டிற்கும், டெக்னாலஜிக்கும் அஜீத் முக்கியத்துவம் தந்து ஓடிக் கொண்டிருப்பதால் வருடத்திற்கு 1 படம் என்பதைத் தாண்டி இப்போது ஒன்றரை வருடங்களுக்கு ஒரு படம் வெளியாகிறது. எனினும் அப்படி வெளியாகும் படங்கள் அவர் ரசிகர்களுக்கு உற்சாக டானிக்காக உள்ளது.
லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி
மேலும் எனது தொழில் நடிப்பு என்னை ரசியுங்கள்.. அன்பு காட்டுங்கள் அது போதும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர்களை அவர்களின் குடும்பத்தைப் பார்க்குமாறும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அஜீத் விரைவில் துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸில் பங்கேற்க உள்ளார்.
இதனை பார்முலா ஒன் கார்பந்தய வீரரும், பிரபல கார் ரேஸருமான நரேன் கார்த்திகேயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜீத் கார் ரேஸில் பங்கேற்க உள்ளதையடுத்து சாலையில் அஜீத் சீறிப் பாயும் வேகத்தைக் காண ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.