புரட்டாசி மாதத்தில் விரத காலம், நவராத்திரி, தீபாவளின்னு வரிசையாகப் பண்டிகைகள் இருக்கு. புரட்டாசி மாதம் மகாளய பட்ச காலம் வருகிறது. அதன் நிறைவாக வருவது தான் மகாளய அமாவாசை. மற்றவற்றை விட இது சிறப்பு வாய்ந்தது.
நம் முன்னோர்கள் எல்லாருமே நாம நல்லாருக்கணும்னு தான் நினைப்பாங்க. அதே மாதிரி அந்தத் தாய், தந்தையரும் நல்லாருக்கணும்னு நாம நினைக்கணும். அதுக்காகத் தான் வருகிறது மகாளய பட்ச காலம். புரட்டாசி மாதம் பௌர்ணமியில் தொடங்கி அமாவாசை வரை வரும் 15 நாள்களும் மகாளயபட்ச காலம். இந்த நாள்களில் விரதம் இருந்து அமாவாசை அன்று திதி கொடுப்பது தான் மகாளய அமாவாசை.
கணவன் இருந்து மனைவி இருந்தால் அவள் யாருக்கும் எள், தண்ணீர் இறைக்கக் கூடாது. பிள்ளைகள் இறந்தால் தகப்பனார் கடமை செய்யலாம்.
இந்த 15 நாள்களும் முன்னோர்கள் நம்மைத் தேடி பார்க்க பூலோகத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் அவர்கள் மேல் உண்மையிலேயே பாசம் வைத்திருக்கிறோம் என்பது தெரிய வேண்டும்.
அவர்களது ஆசியும் அப்போது தான் கிடைக்கும். செப். 18ம் தேதி முதல் அக்.2 வரை மகாளயபட்ச காலம். இதுல 2ம் தேதி அமாவாசை. அக்.1ம் தேதி வரை 14 நாள்கள் மகாளயபட்ச காலம். 21.9.2024 மகாபரணி வருகிறது. சனிக்கிழமை பரணின்னா காலை 8.04மணிக்கு மேல் வழிபடலாம். அல்லது ஞாயிறு 22.9.2024 அன்று காலை 6 மணிக்கு மேல் 6.42 வரை இந்த வழிபாட்டைச் செய்து கொள்ளலாம்.
அமாவாசையுடன் சேர்த்து 15 நாள்கள் தான் மகாளயபட்ச காலம். காலை எழுந்ததும் சூரியன் உதயமான பிறகு எள், தண்ணீர், தர்ப்பை இருந்தால் எடுத்துக்கோங்க. முன்னோர்களை நினைத்து காசி, கயா ஷேத்திரத்தை நினைத்துக்கோங்க. காசி காசி காசின்னு 3 தடவை எள்ளும், நீரையும் இறைத்து அதைக் கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். மதியம் ஏதாவது ஒரு நைவேத்தியம் வைத்து வழிபடலாம். தினமும் சாப்பிடும் சாப்பாட்டைக்கூட படையலாக வைக்கலாம். கண்டிப்பாக செய்ய வேண்டியது யாராவது ஒருவருக்கு அன்னதானம். 14 நாளும் அன்னதானம் செய்வது விசேஷம். 15வது நாள் அமாவாசை. அன்றும் அன்னதானம் செய்வது மிக மிக முக்கியம்.
எறும்பு, காக்கை, பூனை, நாய், மாடு என எந்த உயிரினங்களுக்கும் அன்னதானம் கொடுக்கலாம். மாலையில் தினமும் சாதாரண அகல்விளக்கு நல்லெண்ணை விட்டு பஞ்சு திரி போட்டு ஏற்றுங்க. மாலை 6 மணி முதல் ஏற்றி முன்னோர்களை வழிபட்டு அவங்க நற்கதி அடையவும், திரும்ப பிறவி எடுக்காமலும் இருக்க பிரார்த்தனை செய்யலாம். மகாபரணியில் வழிபடுவது மிக மிக முக்கியம். இது எமனுக்குரிய நாள்.
மகாபரணியில் எமதர்மனை நினைத்து ஏற்றும் தீபம் முன்னோர்களுக்கு மோட்சத்தை அடையக்கூடிய வழியைத் தரும். சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் தான் பரணி. ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணி வரை பரணி வருகிறது. சனிக்கிழமை மாலையில் தான் பரணி தீபம் ஏற்ற வேண்டும். மறந்து விடாதீர்கள். படிக்க இயலாத பிள்ளைகளுக்கு நோட்டு, புத்தகம் கூட வாங்கிக் கொடுக்கலாம்.