எதைக் கொடுக்கணுமோ அதைத் தான் கொடுக்கணும்… எல்லாத்தையும் கொடுத்தா ஜெயம் ரவி நிலைமை தான்..!

By Sankar Velu

Published:

இன்னைக்கு ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்காங்க. என்னுடைய சம்மதத்தைப் பெறவே இல்லை.

ஆனால் அவர் விவாகரத்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார். இது முழுக்க முழுக்க ஜெயம் ரவி எடுத்த முடிவு. என்னுடைய பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வீங்கன்னு கேட்டுள்ளார்.

என்னுடைய குழந்தைகளுக்குப் பெரிய பாதிப்பு உண்டாகும். பொய்யைத் திரும்ப திரும்ப சொன்னா அது ஒரு காலத்துல உண்மையாகிவிடும். அது மாறுவதற்கு முன்னாடியே நான் தடுத்து நிறுத்துறேன்னு சொல்லி இருக்கிறார்.

கல்யாணத்துக்குப் பிறகு ஜெயம் ரவி 100 சதவீதம் அன்பான கணவரா மாற்றியிருக்காருன்னு ஆர்த்தி முன்பு சொல்றது வைரலாகி வருகிறது. ஆயிரம் தான் கோடீஸ்வரரா இருந்தாலும் கணவரோடு சேர்ந்து இருப்பது தான் மரியாதை.

எது எப்படியோ இப்படி இருவரும் பிரிவது தவறு. ஒருவருக்கொருவர் அனுசரனையுடன் ஒத்துப் போக வேண்டும். அது தான் அவர்களது பிள்ளைகளுக்கு நல்லது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

நடிகர், நடிகைகளில் பலருக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனை தான் குடும்பத்தில் விரிசல் விழக் காரணமாகிறது. அப்பா, அம்மா ஒண்ணா சேர்ந்து இல்லையே. சூர்யா, ஜோதிகாவுக்கே இந்த பிரச்சனைங்கறாங்க.

Jayam ravi aarthi
Jayam ravi aarthi

குழந்தைகளைப் படிக்க வைக்கிறதுக்கு பம்பாய் போயிடுறேன்னு அவங்க குழந்தைகளைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்களாம். சிவக்குமாரே ஓட்டல்ல தான் சாப்பிடுறாராம். பார்த்திபன், ராமராஜன் எல்லாம் குழந்தை குட்டிகளோடு இல்லை. ஐஸ்வர்யா, தனுஷ், இமாம் மனைவி சிவகார்த்திகேயன் விவகாரம் என பல பிரச்சனைகள் வந்துள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா குடும்ப பிரச்சனையும் இப்படித்தான். தனுஷூக்கு பல கோடி கடன். இந்தக் கடனை ரஜினியோட சொத்தை ரெண்டா பிரிக்கும்போது கடன்காரன் எல்லாருமே தனுஷோட மாமனார் வசதியானவர்னு தான் கொடுக்கிறான் என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.

தொடர்ச்சியா திரைத்துறையில் ஜி.வி.பிரகாஷ், தனுஷ், ஜெயம்ரவின்னு தொடர்ச்சியா விவாகரத்துகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னைக்கு ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்திக்குத் தெரியாமல் விவாகரத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இது எனக்கே தெரியாதுன்னு அவரது மனைவி அறிக்கை விட்டுருக்காங்க. என்னதான் பிரச்சனை? என நிருபர் கேட்கிறார். அதற்கு தமிழா தமிழா பாண்டியன் அளித்த பதில் இதுதான். ஜெயம் ரவியும் கோடிகளில் சம்பளம் வாங்குற நடிகர். ஆர்த்தி குடும்பமும் பல கோடிகள் சினிமாத்துறையில் முதலீடு செய்ற குடும்பம்.

ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியை வைத்து அவரது மனைவி குடும்பமே சைரன் மாதிரி படங்களைத் தயாரிக்குறாங்க. அதுல பல கோடி கடன். இது வந்தாலே உடன்பாடு இருக்காது. தனுஷ் ஐஸ்வர்யா குடும்பப் பிரச்சனையும் இது தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.