எம்ஜிஆருக்கு செய்த உதவியால்.. சிவாஜியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆரூர்தாஸ்.. பிரபல எழுத்தாளருக்கு வந்த நிலை..

By Ajith V

Published:

தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் வரும் வசனங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினாலும் ஒரு காலத்தில் நடிகர்கள் பேசும் வசனங்கள் தான் படத்தின் வெற்றியை பெரும்பாலும் தீர்மானித்திருந்தது. அந்த அளவுக்கு வசனங்களும் ஒரு படத்தின் வெற்றியின் தீர்மானிக்கும் பெரிய பங்காக விளங்க சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் என பலரும் சிறந்து விளங்குவதற்கு காரணமாகவும் வசனம் இருந்து வந்தது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு வசன கர்த்தாவாக இருந்தவர் ஆரூர்தாஸ். 91 வயதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்த ஆரூர்தாஸ், ஏறக்குறைய 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார்.

ஆரம்பத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நாடகத்தை எழுதி வந்த ஆரூர்தாஸுக்கு 1959 ஆம் ஆண்டு வாழ வைத்த தெய்வம் என்ற திரைப்படத்திற்காக வசனம் எழுதும் வாய்ப்பு முதலில் கிடைத்திருந்தது. இதன் வெற்றியின் காரணமாக அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதிய ஆரூர்தாஸ், சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். எம்ஜிஆருக்கும் 20 படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ் நிச்சயம் பல வசன கர்த்தாக்களுக்கு பெரும் குடைச்சலை தான் அந்த காலத்தில் கொடுத்து வந்தார்.

அப்படி ஒரு சூழலில் ஆரூர்தாஸுக்கும் சிவாஜிக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தற்போது பார்க்கலாம். பெற்றால் தான் பிள்ளையா என எம்ஜிஆர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படத்தில் சிவாஜி தான் நடிப்பதாக இருந்தது. ஆரூர்தாஸ் இந்த படத்தின் கதையை எழுதி இருந்தார். இதனிடையே, இரு மலர்கள் என்ற சிவாஜியின் படப்பிடிப்பில் ஆரூர்தாஸ் அவரை சந்தித்திருந்தார்.

அப்போது பெற்றால் தான் பிள்ளையா கதையில் தன்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது பற்றி ஆரூர்தாஸிடம் கோபமாக சிவாஜி கடிந்து கொள்ள இதற்கு பதில் சொன்ன ஆரூர்தாஸ் இந்த கதையை நான் சொல்லியும் நீங்கள் உடனடியாக அது தயாராக எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என கூறினார்.

மேலும் கதை நன்றாக இருப்பதாக நீங்கள் கூறினாலும் நடிக்க தயாராக இல்லை என சிவாஜியிடமே ஆரூர்தாஸ் கேட்க இருவருக்கும் சிறிய மோதல் அப்போது வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் வேறொரு கதையை சிவாஜிகணேசனுக்காக தயார் செய்து வைத்துள்ளதாகவும் ஆரூர்தாஸ் கூறினாலும் எம்ஜிஆரிடம் சொல்லி நடிக்க வை என்றும் கோபத்துடன் சிவாஜி கூறினாராம்.

இந்த மோதல் பெரிதாக வெடிக்க இருவரும் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனால் இனிமேல் இரண்டு பேரும் சேர்ந்து பணிபுரியக் கூடாது என்றும் அந்த சமயத்தில் அவர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் சிவாஜியின் எட்டு படங்களில் மட்டும் தான் ஆரூர்தாஸ் பணியாற்றி இருந்தார்.

ஆனால் இந்த சண்டை முடிந்த பின்னர் 20 சிவாஜி படங்களுக்கு ஆரூர்தாஸ் கதை வசனம் எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.