இந்தியாவில் உள்ள புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் மும்பை மற்றும் அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புல்லட் ரயில் பாதையில் 21 கிலோமீட்டர் தூரத்தில் அரபிக் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப்பாதைகள் தோண்டிய அனுபவம் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உள்ளது. குறிப்பாக கொல்கத்தா மெட்ரோ திட்டத்தில் ஹூக்ளி ஆற்றின் அடியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டம் குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மும்பை – அகமதாபாத் இடையே ரயிலில் பயணம் செய்ய வழக்கமாக 6 மணி நேரம் ஆகும் நிலையில் புல்லட் ரயிலில் 2 மணி 7 நிமிடத்தில் சென்றுவிட முடியும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான ரயில் பெட்டி, தொழில்நுட்பம், கடனுதவி ஆகியவை ஜப்பானிடம் இருந்து பெறப்பட்டு உள்ளதாகவும், ஜப்பானின் ஷின்கான்சென் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மொத்தம் 10 பெட்டிகளை கொண்ட புல்லட் ரயிலில் முதல் வகுப்பு, உயர் வகுப்பு, சிறப்பு உயர் வகுப்பு ஆகிய 3 வகை அமைப்பூகள் இருக்கும் என்றும் இந்த ரயிலில் 730 பேர் பயணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.