தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. 2 வாரத்தில் நடக்க போகும் பெரிய சம்பவம்

By Keerthana

Published:

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பின்பு தங்கம் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. இனி தங்கம் விலை அடுத்த 2 வாரத்திற்குத் தொடர்ந்து உயர்வுடனே இருக்கும் என கூறுகிறது.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,352-க்கு விற்பனையான நிலையில் இன்று (செப்.6) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.53,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.6,668 ஆக இருக்கிறது.

இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.58,200 ஆகவும் ஒரு கிராம் ரூ.7,275-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 18 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.43,696 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,462-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.89.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை உயர்வுக்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கிறது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வின் அளவீட்டை நிர்ணயம் செய்யும் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு தரவுகள் இன்று வெளியாக உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் செப்டம்பர் 17-18 ஆம் தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதிகப்படியான வட்டியைக் குறைக்கத் தயாராக இருக்கும் காரணத்தாலும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இது ஒருபுறம் எனில், இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் துவங்கியிருக்கிறது. திருமண சீசன் துவங்க உள்ளதால், நாட்டு மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் இந்தியாவில் அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணம். தங்கம் அடுத்த ஒரு மாதத்தில் கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது. முன்னதாக தங்கம் விலை சுங்கவரி குறைப்பு காரணமாக கணிசமாக குறைந்தது. ஆனால் அந்த வரி குறைப்பால் தற்காலிகமாகவே தங்கம் விலை குறைந்தது. உலக அளவில் தங்கம் விலை ஏறத்தொடங்கியதால் பழையபடி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.