ஒரு சின்ன நக வெட்டியை வைத்து உருவான சூப்பர் சண்டைக் காட்சி.. சிறு துறும்பும் பல் குத்த உதவும் பழமொழியை மெய்ப்பித்த மிஷ்கின்..

By John A

Published:

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ல் வெளிவந்த க்ரைம் திரில்லர் ஆக்சன் திரைப்படம் தான் யுத்தம் செய். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களுக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே, ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற கன்னித்தீவு பொண்ணா பாடல் சூப்பர் ஹிட் டான்ஸ் பாடலாக இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இந்தப் படத்தில் முதன் முறையாக இயக்குநர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை ஹீராவாக அறிமுகப்படுத்த நினைத்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் படம் ஒரு காமெடி படமாக என இருக்க வேண்டும் என விரும்பியதால் இந்த வாய்ப்பினை நிராகரித்து பின் சேரன் இணைந்தார்.

பொதுவாக சேரன் நடித்த படங்கள் அழுமூஞ்சியாய், சோகமாய், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாய் இருக்கும். ஆனால் யுத்தம் செய் படம் சேரனை வெறொரு கோணத்தில் காட்டியது. படத்தின் தலைப்புக்கு ஏற்றாற் போல் சேரனை ஆக்சன் காட்சிகளில் பயன்படுத்த நினைத்தார் மிஷ்கின்.

ஆனால் சேரன் மிஷ்கினிடம் என்னை இதுபோன்று 10 ஆட்களை அடிப்பது போல காட்சியில் நடிக்க வைத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்னுடைய இயல்பிலேயே நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் மிஷ்கின் இதை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு சண்டைக் காட்சியை சேரனுக்காக உருவாக்கி ஷுட்டிங் நடத்தியிருக்கிறார்.

ஒரே நேரத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம்.. அட்டகாசமான வெற்றியுடன் தேசிய விருது வரை வென்ற தல படம்..

அதன்பின் அதனைப் போட்டுப் பார்த்த போது சேரன் சொன்னது போலவே திருப்தி இல்லாததால், சேரனுக்கு எப்படியாவது ஒரு சண்டைக் காட்சி அதுவும் இடைவேளைக் காட்சியாக அமைய வேண்டும் என நினைத்து ஷுட்டிங் செல்ல காட்சிப் படி அடியாட்கள் கையில் கத்தியுடன் இருந்தனர். அப்போது அருகில் ஒரு நகவெட்டி இருந்திருக்கிறது. மிஷ்கினுக்கு ஓர் ஐடியா தோன்றவே இதனையே சேரனின் கையில் ஆயுதமாகக் கொடுத்திருக்கிறார். இப்போது இந்த சண்டைக் காட்சி செட் ஆகும் என்று நினைத்து அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்.

அந்த சண்டைக் காட்சியில் முதலில் சேரனைக் குத்த ஒருவன் வரும் போது பாக்கெட்டினுள் கையை விடுவார். அருகில் வரும் போது நகவெட்டியை எடுக்கும் போது சிரிப்பாகத்தான் வரும். ஆனால் மிஷ்கின் அதைத்தான் எதிர்பார்த்து சிரிப்பு முடிந்தவுடன் சீரியஸ் பக்கம் ரசிகனைத் திருப்ப நகவெட்டியில் உள்ள கத்தியை சேரன் பிடித்து எதிரியை மடக்கி குத்துவது போல் இந்த சண்டைக் காட்சி அமைந்திருக்கும்.

இந்த சண்டைமுடிந்தவுடன் இடைவேளை வரும். தியேட்டரில் யுத்தம் செய் படம் வெளியான போது இந்தக் காட்சி பரவலாகப் பேசப்பட்டது. மேலும் சேரனுக்கும் ஆக்சன் காட்சிகள் வரும் என நிரூபித்தார் மிஷ்கின்.