மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா? பல வருடங்களுக்குப்பிறகு வெளிப்படுத்திய ஹீரோ..

By John A

Published:

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மணிரத்னம் இயக்கத்தில் 1996-ல் வெளிவந்த திரைப்படம் தான் பம்பாய். இந்து-முஸ்லீம் மதக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாரிக்குவித்தது.

அர்விந்த்சாமி, மணிஷா கொய்ராலா, நாசர்,கிட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உயிரே.. உயிரே பாடல் உள்ளிட்ட அத்தனை பாடல்களும் இன்றும் ஹிட் பிளே லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெறும் பாடல்களாக விளங்கி வருகிறது.

தளபதி படத்தில் அர்விந்சாமியை நடிகராக்கிய மணிரத்னம் அதன்பின் பம்பாய் படத்தில் அவரை ஹீரோவாக்கினார். அர்விந்த்சாமி போல் மாப்பிள்ளை வேண்டும் என்று இன்னும் சொல்லும் அளவிற்கு தனது வசீகர முகத்தாலும், நடிப்பாலும் இளம் பெண்களைக் கவர்ந்தார் அர்விந்த் சாமி. பம்பாய் படம் சூப்பர் ஹிட்டாகியது. இப்படி பெரும்வெற்றி பெற்ற பம்பாய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

வேறு யாருமல்ல நம்ம சீயான் விக்ரம் தான். மீரா, புதிய மன்னர்கள் என அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு அப்போது பம்பாய் பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்திற்காக தாடியை எடுக்க வேண்டும் என்பதாலும், அந்த நேரத்தில் புதிய மன்னர்கள் பட ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பம்பாய் பட வாய்ப்பு விக்ரமுக்கு நழுவிப் போயிருக்கிறது.

கவினுக்கு இருக்குற தைரியம் கூட சூர்யாவுக்கு இல்லையா.. இணையத்தில் விமர்சிக்கும் ரசிகர்கள்..

அப்படி விக்ரம் பம்பாய் படத்தில் நடித்திருந்தால் சேது படத்திற்கு முன்னரே தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும். இருந்த போதிலும் சேது படத்திற்குப் பின் தொடர் ஹிட் கொடுத்த விக்ரமுக்கு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வந்த வாய்ப்புதான் ராவணன். தமிழ் மற்றும் இந்தியில் விக்ரம் நடித்திருந்தார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022-ல் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விக்ரம் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பம்பாய் படத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் கதாபாத்திரத் தேர்வு தான். இதில் முஸ்லீமான இந்துவாக நாராயணன் பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும், இந்துவான கிட்டியை முஸ்லீமாக பசீர் கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்து மதச் சார்பின்மையை தனது படத்தில் புகுத்தியிருந்தார் மணிரத்னம்.