விநாயகர் சதுர்த்தி 2024 க்கான நாள் நேரம், வழிபாடு மற்றும் விசர்ஜன முறை பற்றி பார்ப்போம்.
இந்த ஆண்டு வரும் செப்.6ம் தேதியா, 7ம் தேதியா என்று குழப்பம் வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை வரவேற்கின்ற நாள் 6ம் தேதியில் இருந்தே ஆரம்பிக்கிறோம். வட மாநிலங்களில் 10 நாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். வருகிற செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கி 17ம் தேதி விசர்ஜனம் வரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதனால் 6ம் தேதியே கோவில்களில் சென்று விநாயகரை வழிபட்டு வரலாம். வீட்டில் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியைக் கடைபிடிக்கலாம். விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளைத் தான் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.
விநாயகர் சதுர்த்தி நேரம் செப்.6 பிப் 3.01 மணி முதல் செப் 7 மாலை 5.37 வரை உள்ளது. மாவிலைத் தோரணங்கள், ரங்கோலி, பதார்த்தங்கள் செய்வது என பல வேலைகளை 6ம் தேதியே செய்து கொள்ளலாம். அப்பம், முறுக்கு, வடை, மோதகம் எல்லாம் கெடாது. அதனால் 6ம் தேதியே செய்து கொள்ளலாம். 7ம் தேதி கொழுக்கட்டை செய்யலாம்.
விநாயகர் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை 6ம் தேதியே செய்து கொள்ளலாம். விநாயகப்பெருமானின் படத்தில் அல்லது சிலையை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். விநாயகப் பெருமான் முழுமுதற்கடவுள். சிலைக்கு அபிஷேகம் செய்து சந்தன, குங்குமம் இட வேண்டும்.
விநாயகருடைய யந்திரம் வைத்தும் வழிபடலாம். விநாயகர் வணங்கியதும், குலதெய்வத்தை வணங்கிவிட்டு பூஜை முறைகளைச் செய்ய வேண்டும். பிராண பிரதிஷ்டை, சோடச உபசாரம், உத்தர பூஜை, விசர்ஜனம் என 4 வகையாக பூஜை முறைகளை நம் பெரியவர்கள் பிரித்துள்ளார்கள்.
பிராண பிரதிஷ்டை பூஜையில் குருக்கள் மந்திரம் சொல்வாங்க. சோடச உபசாரத்தில் 16 வகையான உபசாரங்கள் இருக்கு. தாலாட்டுறது, விசிறி விடுவது, நைவேத்தியம் செய்வது, மந்திரங்கள் சொல்வது, பூஜையின் போது 21 வகையான இலைகளைப் படைப்பது என 16 வகையான உபசாரம் இருக்கு. இது கோவில்களில் செய்வார்கள்.
உத்தர பூஜையில் விஸ்தாரமாக வீட்டில் செய்வது, நைவேத்தியம் செய்வது. மந்திரங்கள் சொல்லலாம். பெரிய சிலைகள் வைத்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பொதுவான இடங்களில் வைத்து வழிபட்டு 10வது நாளில் கடலில் விசர்ஜனம் செய்வார்கள். இது விசர்ஜன பூஜை.
அடுத்ததாக வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய பிள்ளையாரை 3வது நாளில் விசர்ஜனம் செய்து கொள்ளலாம். அடுத்த வருஷமும் நீங்க கட்டாயம் வரணும் பிள்ளையாரேன்னு வேண்டிக் கொண்டு கடலில், ஆறு, குளம் ஆகியவற்றில் கரைக்கலாம்.
அவை இல்லாவிட்டால் வீடுகளில் வளர்க்கப்படும் தொட்டிச்செடிகளில் பிள்ளையாரை வைத்து நீரூற்றி விடலாம். அதில் விதையும் போடலாம். வழிபாட்டுக்குரிய முகூர்த்த நேரம் செப். முற்பகல் 11.03 மணி முதல் மதியம் 1.34 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் வழிபாட்டை செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை வழங்கியவர் அனிதா குப்புசாமி.