ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நேரம் தூங்குறீங்களா? உங்களுக்குத்தான் இந்த நியூஸ்.. டாக்டர் சொல்லும் உண்மை

இயந்திரமான உலகில் மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் தினந்தோறும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். தேனீ போல் பம்பரமாய்ச் சுழன்று பொருளீட்டி தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்கிறோம். குறைந்த பட்சம் தினமும் பயண நேரங்களையும் சேர்த்து…

Sleep

இயந்திரமான உலகில் மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் தினந்தோறும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். தேனீ போல் பம்பரமாய்ச் சுழன்று பொருளீட்டி தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்கிறோம். குறைந்த பட்சம் தினமும் பயண நேரங்களையும் சேர்த்து 10 மணி நேரத்திற்கும் அதிகமாக நமது உழைப்பு இருக்கிறது. திங்கட்கிழமை ஆகிவிட்டால் போதும் காலை 6 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து கிளம்பி பணிக்குச் செல்வது என்பது பலருக்கும் மிக அசதியான ஓர் செயலாகவே இருக்கிறது. அதிலும் சன்டே நைட் பார்ட்டி என்றால் மறுநாள் தலைவலியுடன் தான் அந்த நாளே துவங்கும்.

அதிலும் பணிக்குச் செல்லும் பெண்களின் நிலைமையோ இன்னும் பரிதாபம். கணவர், குழந்தைகளுக்கான உணவினைச் சமைத்து அவர்களையும் பள்ளிக்கு, பணிக்கு அனுப்பி அதன்பின் தான் வேலைக்குச் கிளம்பிச் செல்லும் போது இருக்கும் சுமையே அவர்களைக் களைப்பாகி விடும். அப்படி தினமும் களைப்புடனே பணிக்குச் சென்று திரும்பி மீண்டும் மறுநாள் அதேபோன்று கடிகார முள்ளாய் சுழன்று செல்கிறது வாழ்க்கை.

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவை

அவர்களுக்குக் கிடைக்கும்ஒரே ஆறுதல் ஞாயிற்றுக்கிழமை தூக்கம் என்பது தான். வாரத்தில் 6 நாட்களிலும் விட்ட தூக்கத்தை மொத்தமாய்ச் சேர்த்து வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் உறங்குவார்கள். இப்படி உறங்குவதால் நன்மைதானா என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவு அளித்துள்ள தகவலின் படி அது நல்லதே என்று தெரிவிக்கிறது.

வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு இருதய பிரச்சினை ஏற்படும் அபாயம் 20% குறைவாக இருக்குமாம். லண்டனைச் சேர்ந்த இருதய நல மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் குறையும் தூக்க நேரத்தினை வார இறுதி நாள் தூக்கம் அதை ஈடு செய்யும் விதமாக அமைந்திருப்பதால் ஆரோக்கியம் மேம்படும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அப்புறம் என்ன சும்மாவே ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்குத் தான் எழுந்திரிப்போம்.. இனி இந்த செய்தியால் இன்னும் ஒரு மணிநேரம் எக்ஸ்டரா தூக்கம் போடலாம்..