30 வருடத்திற்குப் பிறகு 1 கோடியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கம்மியா?

By John A

Published:

நாட்டின் பொருளாதாரத்திற்கேற்ப இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பெரும்பாலும் தற்போது ரூபாய் நோட்டுக்கள் பயன்பாடு குறைந்து வருகிறது. பெட்டிக்கடையில் 5 ரூபாய்க்குப் பொருள் வாங்கினால் கூட யுபிஐ மூலம் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. சுமார் 50,60 வருடங்களுக்கு முன்பு 10 ரூபாய் என்பது அப்போது ஆயிரம் ரூபாயாகப் பார்க்கப்பட்டது. சில நூறுகளில் சம்பளம் வாங்கினாலே அவர் வசதியானவர் என்ற பிம்பம் இருந்தது.

மேலும் அதற்கேற்றவாறு பொருட்களின் விலைவாசியும் பைசாவில் தான் இருந்தது. நிலங்கள் சில நூறுகளில் தான் விற்கப்பட்டன. ஆனால் தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து 1 கோடியின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார வீக்க விகிதம் சுமார் 6% என்று கணக்கிட்டுக் கொண்டால் ரூ. 1 கோடியின் மதிப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ. 55.84 லட்சமாகவும், 20 ஆண்டுகளில் 31.18 லட்சமாகவும், 30 ஆண்டுகளில் 17.41 லட்சமாகவும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். இதன் மூலம் பணமதிப்பினை முன்கூட்டியே அறிந்து நமது சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்களை கணித்து அதன்படி நெறிப்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஓய்வு காலத்திற்கு நெருக்கடியான சூழலைத் தவிர்த்து சேமிக்கலாம்.

பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

ஏற்கனவே பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம், அந்நிய செலவாணி போன்றவற்றாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும் இந்திய ரூபாயின் மதிப்பானது அல்லாடும் நிலையில் தற்போது பொருளாதார நிபுணர்களின் இந்த கணிப்பு இன்றைய இளைஞர்களை இன்னும் முன்னோக்கி ஓட வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.