மீடியாவை விட மருத்துவத் துறையில… கொளுத்திப் போட்ட சின்மயி.. வைரலாகும் ஆடியோ..

By John A

Published:

பிரபல பின்னனிப் பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி கேரளாவில் நீதிபதி ஹேமா அறிக்கை பற்றி தனியார் செய்தி சேனலுக்கு தொலைபேசியில் பரபரப்பு பதில் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு அதே சினிமாத் துறையைச் சார்ந்த பிரபலங்களால் நிகழும் பாலியல் வன்முறைகள் பற்றி நீதிபதி ஹேமா அறிக்கை ஒன்றை கேரள அரசிடம் சமர்ப்பித்தார். அதில் பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடைபெற்றது உண்மைதான் எனவும், வாய்ப்பிற்காக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் எனவும் அதில் கூறப்பட்டிருந்திருந்தது.

இந்திய சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய இவ்விவகாரம் தொடர்பாக மலையாள திரை உலகைச் சார்ந்தவர்கள் அடுத்தடுத்து புகாருக்கு ஆளாகியுள்ளனர். தமிழ் சினிமா உலகிலும் இதுபோன்ற நிலை இருக்கிறது என தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷாலும் நேற்றுப் பேட்டியளித்திருந்தார். இவ்விவகாரங்கள் தொடர்பாக பாடகி சின்மயியிடம் கேட்டபோது,

“சினிமாத் துறையை விட மருத்துவத் துறையில் புளுத்து நெளியுது. அங்குதான் நாறுகிறது.மருத்துவம் படித்து வெளியே வர வேண்டும் என்றால் பெண் டாக்டர்கள் ஹெச். ஓ.டி உள்ளிட்ட அனைவரிடம் சகித்துத்தான் வர வேண்டும். அது கௌரவமான தொழில் என்பதால் உள்ளே நடப்பதைப் பற்றி யாரும் வெளியில் சொல்வதில்லை. இப்போது வெளியில் பெரிய டாக்டர், ஹெச்.ஓ.டி என்று கூறுபவர்கள் ஒருகாலத்தில் அவர்களும் துஷ்பிரயோகம் செய்தவர்கள்தான்.

செருப்பால அடிங்க.. திரைத்துறையினர் மீதான நடிகைகளின் பாலியல் புகார்களுக்கு விஷால் பளார் பதில்..

அவர்களுக்குப் பணிந்து போகவில்லை என்றால் பெயில் ஆக்கிவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். எந்த இடத்தில் ஓர் ஆணுக்கு அதிகாரம் நிறைய இருக்கிறதோ அதை அவன் துஷ்பிரயோகம் செய்துதான் விடுவான். கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை குறித்து இப்போது அத்தனை டாக்டர்கள் பேசி வருகின்றனர்.”

என்று பேட்டியளித்திருக்கிறார் சின்மயி. ஏற்கனவே கவிஞர் வைரமுத்து மீது Meetoo புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.