அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த தொழில் துறை மாநாட்டில் பங்கு கொண்டு பல்வேறு வகையான தொழில்களைத் தொடங்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
முன்னதாக 17 பயணமாக அமெரிக்க சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திமுக முன்னாள் அமைச்சரும், நடிகருமான நெப்போலியனும் வரவேற்றார். தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுயாற்றுகிறார் ஸ்டாலின்.
இந்திய தேசிய சிறுதொழில் தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…
இந்நிலையில் சான்பிரான்ஸ்சிஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் Yiled Engineering Systems நிறுவனத்துடன் ரூ.150 கோடி முதலீட்டில் சுமார் 300 வேலை வாய்ப்புகளும், Paypal நிறுவனத்துடன் 1000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும், Microchip நிறுவனத்துடன் சுமார் ரூ. 250 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் அதன்மூலம் 1500 வேலைவாய்ப்புகளும், ஓமியம் நிறுவனத்துடன் ரூ. 400 கோடி முதலீட்டில் 500 வேலை வாய்ப்புகளுடன் கூடிய ஒப்பந்தமும், Geakminds நிறுவனத்துடன் 500 பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் ஒப்பந்தமும், பிரபல செல்போன் நிறுவனமான நோக்கிய நிறுவனத்துடன் ரூ.450 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை வாய்ப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் அச்சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது “தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவிலும் பொருளாதாரத்தில் 2-வது மிகப்பெரிய மாநிலமாக இருக்கிறது“ என்று பேசினார்.
மேலும் அமெரிக்காவில் வசிக்கும் அயலக வாழ் தமிழ் மக்களுடன் சந்திப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். உடன் அவர் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.