நாடகக் கம்பெனியில் எடுபிடி வேலைபார்த்த செந்தில்.. முன்னணி காமெடியனாக்கிய பாக்யராஜ்..

By John A

Published:

சினிமாவில் நடிக்கும் ஆசையில் தனது சொந்த ஊரான இராமநாதபுரம் முதுகுளத்தூரில் இருந்து 1970-களின் மத்தியில் சென்னைக்குப் புறப்பட்டு வந்தவர் தான் நடிகர் செந்தில். எடுத்த உடனேயே இவருக்குச் சினிமா வாய்ப்பு கிடைத்திடவில்லை. ஆரம்பத்தில் மதுபானக் கடையில் பணியாற்றியவர் பின்னர் நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அங்கேதான் கல்லாப்பெட்டி சிங்காரம் உள்ளிட்ட நடிகர்களின் அறிமுகம் இவருக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த நாடகக் கம்பெனியில் நடிகர் பாக்யராஜ் அடிக்கடி வருவது பழக்கம். அப்போது அங்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்த செந்திலைக் கண்டிருக்கிறார். அவரது உருவமும், பேச்சும் அவரைக் கவரவே செந்திலுக்கு எப்படியாவது வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்று நினைத்திருக்கிறார் பாக்யராஜ். செந்தில் அப்போது சினிமாவில் 1979 ஒரு கோயில் இரு தீபங்கள், ஆடுகள் நனைகின்றன என்ற இரு படங்களில் சிறிய வேடத்தில் நடித்தார்.

இதனையைடுத்து கே.பாக்யராஜ் தான் இயக்கிய இன்றுபோய் நாளை வா திரைப்படத்தில் செந்திலுக்கு வசனம் கொடுத்து நடிக்கச் சொல்லியிருக்கிறார். இதனால் மகிழ்ந்து போன செந்தில் அந்தக் காட்சியில் பாக்யராஜ் வியக்கும் வண்ணம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தூறல் நின்னு போச்சு படத்திலும் மெயின் கதாபாத்திரம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திலும் செந்திலின் நடிப்பு கவனிக்க வைக்க காமெடி உலகில் அடியெடுத்து வைத்தார்.

குடிகாரர்களின் மனநிலையை பாடலில் அப்படியே எடுத்துச் சொன்ன கண்ணதாசன்.. மிரண்டு போன எம்.எஸ்.வி..

தொடர்ந்து பாக்யராஜ் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் கவுண்டமணியையும், செந்திலையும் பயன்படுத்தியிருப்பார். கடைசியாக இயக்கிய சொக்கத் தங்கம் படத்திலும் இவர்களது காமெடி சூப்பராக ஒர்க்அவுட் ஆகியிருக்கும்.

கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்த செந்தில் அதில் கவுண்டமணியுடன் மட்டும் சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர்களது காம்போ தமிழ் சினிமா இருக்கும் வரை யாராலும் மறக்க முடியாத காமெடி காட்சிகளாக தியேட்டரையே சிரிக்க வைத்தன. ஒருகட்டத்திற்குப் பின் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பதிலிருந்து விலகி தனியே நடிக்க ஆரம்பித்தார் செந்தில். 70, 80, 90-களில் பிறந்தவர்களை முப்பது வருடங்களுக்கும் மேலாக காமெடியில் கட்டிப் போட்டு இதுவரை யாரும் அவ்விடத்தைப் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு கவுண்டமணியும், செந்திலும் காமெடியில் புது சகாப்தத்தையே உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.