‘எப்படி நடந்தது..உடனே ஏன் என்னிடம் சொல்லவில்லை’.. கடும் கோபத்தில் விஜய்?

By Keerthana

Published:

சென்னை: கொடிக்கும், அதில் இடம்பெற்ற யானைக்கும் எதிர்ப்புக் கிளம்புவதால் விஜய் கடும் கோபத்தில் இருக்கிறாராம். விரைவில் இது குறித்து தெளிவான ஒரு விளக்கத்தை விஜய் தருவதற்கு வாய்ப்பு உள்ளதாம்.

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார். கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டிருக்கிறது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது.

கொடியில் இடம்பெற்ற யானையின் உருவப்படத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத் திருக்கிறது. யானை உருவத்தை கொடியில் இருந்து நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் அக்கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதேபோல் எங்கள் சங்கத்தின் கொடியை விஜய் பயன்படுத்தியிருப்பதாக ஒரு சமுதாய இயக்கம் கேள்வி எழுப்பியது. பின்னர் சமாதானம் அடைந்தது.

இந்நிலையில் கொடிக்கும், அதில் இடம்பெற்ற யானைக்கும் எதிர்ப்புக் கிளம்புவதால் விஜய் கடும் கோபத்தில் இருக்கிறாராம். எந்த விசயத்தை தொடங்கு முன் நிறைய விவாதம் நடத்தியும், ஆலோசனை நடத்தி விட்டு பிறகே முடிவெடுக்கும் விஜய், யானை மற்றும் வாகை மலர் விஷயத்தில் எழுந்த விமர்சனங்களை பார்த்த இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை என தனக்கு ஆலோசனை வழங்குபவர்களிடம் கோபப்பட்டாராம்.

முன்னதாக தனது கட்சியின் பெயரை அறிமுகப்படுத்திய போது, தமிழக வெற்றி கழகம் என்பது சரியல்ல ; வெற்றிக்கழகம் என்பதுதான் சரி என்கிற சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு வெற்றிக்கழகம் என தனது கட்சியின் பெயரை மாற்றிக் கொண்டார். அதேபோல, இப்போது கொடிக்கும் அதில் இடம்பிடித்துள்ள யானைக்கும் எதிர்ப்பு வந்துள்ளதால் விஜய் விளக்கம் தர வாய்ப்பு உள்ளதாம்.

இது போக நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பிரமுகர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் செய்துள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் கட்சியில் 5 முக்கியமான நிர்வாகிகள் சேர உள்ளனர். ஏ என்ற இனிஷியல் கொண்ட நபரும்.. இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த 2 நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த 2 பேரும் விஜயின் தமிழக வெற்றிகழக கட்சியில் இணைய உள்ளார்களாம்.