மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் உள்ளதாக எழுந்த புகார்களால் கேரள அரசு நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை நியமித்தது. இந்தக் கமிட்டி விசாரணை செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் பாலியல் அத்துமீறல்கள் இருப்பது உண்மைதான் என்று அம்பலமானதால் மலையாளத் திரையுலகில் நடிகைகள் தற்போது கொதித் தெழத் தொடங்கியிருக்கின்றனர். நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ்கான் ஆகியோர் மீதும் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர்.
பொதுவாக மலையாளச் சினிமா உலகம் தரமான கலைப் படைப்புகளைக் கொடுக்கும் என்ற பெயரைப் பெற்ற நிலையில் தற்போது இந்த அறிக்கை வெளியாகி மலையாள சினிமா மீதான பார்வையை மாற்றச் செய்திருக்கிறது.
நீதிபதி ஹேமா அறிக்கையானது மலையாளத் திரையுலகில் இருக்கும் 51 பெண்கள் மீது விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. புதிதாக வரும் நடிகைகள் எதற்கும் சரணடைவார்கள் என்ற கோணத்தில் அவர்களிடம் திரைத்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் வரப்பெற்றுள்ளன.
உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.. செப்.14-க்குள் முந்திக்கோங்க..
இதனால் மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக்கும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திரைப்பட அகாடமி தலைவர் பதவியிலிருந்து பிரபல இயக்குநர் ரஞ்சித்தும் ராஜினாமா செய்தனர். கேரள தேசத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
மேலும் மலையாள நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, பாபுராஜ் உள்ளிட்ட 10 பேர் மீதும் நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். தாங்கள் பணிபுரிந்த படங்களில் மேற்கண்ட நடிகர்கள் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனிடையே மேற்கண்ட புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக கேரள அரசு 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. தமிழகத்திலும் இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்னர் #metoo என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி தமிழ் சினிமாவின் பல பிரபலங்களின் முகத்தினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.