சினிமாவுக்காக படித்த சான்றிதழையே கிழித்துப் போட்டு வந்த மாரி செல்ராஜ்.. படைப்புகள் மேல் இவ்ளோ காதலா?

By John A

Published:

தற்போது தமிழ் சினிமா துறையே எங்கு பார்த்தாலும் வாழை பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தினை தூக்கிக் கொண்டாட, மறுபுறம் மாரி செல்வராஜ் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் குறைந்த பாடில்லை. இருப்பினும் தான் பட்ட வலியை, ஒடுக்குமுறை இனி ஒருபோதும் அடுத்த தலைமுறைக்கு நிகழக் கூடாது என எண்ணி வாழை படத்தின் மூலம் அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜ் குடும்பத்தில் அனைவருமே நன்கு படித்தவர்கள். அவரது தந்தை விவசாயக் கூலி வேலை பார்த்தாலும், தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைத்திருக்கிறார். மாரி செல்ராஜும் வகுப்பில் முதல் மாணவராகவே ஜொலித்திருக்கிறார். இதேபோல் அவரது அண்ணனும் நன்கு படித்து, தேர்வெழுதி தற்போது அரசுப் பதவியில் இருக்கிறார்.

ஆனால் மாரி செல்வராஜுக்கு எழுத்தின் மீதான ஆர்வமும், சினிமா மோகமும், விட வில்லை. இயக்குநர் ராமிடம் உதவியாளராகச் சேர்ந்து சினிமா கற்கிறார். ஒருபுறம் தனது பேனா முனையால் பல்வேறு இதழ்களிலும், புத்தகங்களிலும் தான் பட்ட சாதி அடக்குமுறை வலிகளை பதிவு செய்கிறார்.

உதயநிதி ஹீரோவானது இப்படித்தான்… அச்சாரம் போட்ட ஆதவன்.. கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த ஐடியா

இந்த தழும்பு ஆறாத ரணமாக அவரது மனதில் நிற்க உருவானதுதான் பரியேறும் பெருமாள். இந்தப் படம் யார் அது மாரி செல்ராஜ் என்று உயர்த்திப் பார்ப்பதற்குள் கர்ணன் மூலம் தான் இப்படித்தான், தனது படங்கள் இப்படித்தான் என்பதை தெளிவாகச் சொல்லியிருப்பார். மாமன்னன் அதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது. தற்போது வாழை இத்தனை படங்களுக்கும் பிள்ளையார் சுழிப் படமாக அமைந்திருக்கிறது.

மாரி செல்வராஜ் வீட்டில் சினிமா என்றதும் எதிர்ப்பு கிளம்ப, எனது பாதை இதுதான் என தெள்ளத் தெளிவாக முடிவெடுத்திருக்கிறார். ஆனால் படிப்பு என்றும் கைவிடாது, அண்ணனைப் போல் அரசுப் பதவிக்குச் செல்ல வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருந்தாலும் மாரி செல்வராஜுக்கு கனவெல்லாம் கேமரா மீதும், தான் பட்ட வலிகளை பதிவு செய்வதும் தான் பிரதானமாக இருந்தது.

இங்கிருந்தால் தன் லட்சியத்திற்கு இடையூறாக இருக்கும் என எண்ணி தான் படித்த சான்றிதழ்களை கிழித்துப் போட்டிருக்கிறார். ஏனெனில் சென்னை வந்தால் மீண்டும் அவரை அவரது அண்ணன் ஊருக்கு அழைத்து வந்து விடுவார் என்பதால் தவறான முன்னுதாரணமாக இருந்தாலும் சான்றிதழ்களை கிழித்துப் போட்டு சென்னை வந்திருக்கிறார்.

ஆனால் இன்று சினிமா உலகம் போற்றும் சிறந்த படைப்பாளியாக தான் நினைத்த எல்லையைத் தொட்டிருக்கிறார் மாரி செல்வராஜ். எனினும் இன்றும் மாரி செல்வராஜின் பெற்றோர் சினிமா தொழில் ஆபத்தானது நிரந்தர வேலையே நிம்மதி தரும் என மாரி செல்வராஜிடம் எடுத்துரைக்கின்றனர். தனது படைப்புகளுக்காக தன் தூக்கத்தைத் தொலைத்து, மன அழுத்தத்திற்குள்ளாகி எடுக்கும் படங்களுக்கு நிறைய பணம் கிடைத்தாலும் இவ்வளவு வலிகளைத் தாங்கிக் கொண்டு இப்படிப் படம் எடுக்க வேண்டுமா என அவரது பெற்றோர் பயந்தாலும் அடுத்த தலைமுறைக்கு கடந்த கால வலிகளைப் பதிவு செய்து முன்னனி இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் மாரி செல்வராஜ்.