தமிழ் சினிமாவில் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிபவர் பா ரஞ்சித். இவர் சென்னையில் ஆவடியில் பிறந்தவர். கல்லூரி காலத்தில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு இயக்குனர் ஆக வேண்டும் என்ற சிந்தனையோடு இருந்தவர்.
முதலில் சிவசண்முகத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பா ரஞ்சித் பின்னர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சென்னை 600028 என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2012 ஆம் ஆண்டு மிக குறைந்த பட்சத்தில் எடுக்கப்பட்ட அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பா ரஞ்சித். சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அட்டகத்தி நல்ல விமர்சனங்களை பெற்றது.
2014 ஆம் ஆண்டு பா ரஞ்சித் மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அடுத்ததாக 2016 ,18 ஆகிய ஆண்டுகளில் ரஜினிகாந்தை வைத்து கபாலி காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் ரஞ்சித். பின்னர் 2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்கினார். முற்றிலும் பழைய காலத்தில் உள்ள பாக்ஸிங் கலாச்சாத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
2021 ஆம் ஆண்டு நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கிய ரஞ்சித் அடுத்ததாக தற்போது நடிகர் சீயான் விக்ரமை வைத்து 2024 இல் தங்கலான் படத்தை இயக்கினார். அது இப்போது வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இது தவிர தயாரிப்பாளராகவும் நீலம் ப்ரொடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பொம்மை நாயகி போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளார். தற்போது ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட பா ரஞ்சித் தன்னுடைய படத்திற்கு தேசிய விருது தவறி போனதை பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், சார்பட்டா பரம்பரை ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தேன். ஆனால் அந்த படத்திற்கு நேஷனல் அவார்டு கிடைக்க வேண்டியது. ஆனால் நேஷனல் அவார்ட் கிடைக்க விடாமல் தடுத்துட்டாங்க. ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருக்கு, செகண்ட் ஹாஃப் நல்லா இல்ல அப்படி இப்படின்னு சொல்லி கிடைக்க விடாம பண்ணிட்டாங்க. இப்படியே நிறைய இடத்துல என்னோட வேலைக்கான அங்கீகாரமே கிடைக்க விடாம பண்றாங்க என்று ஆதங்கத்துடன் பேசி உள்ளார் பா ரஞ்சித்.