நாய் கடித்ததால் ஏற்பட்ட வெறி காரணமாக சாலையில் செல்லும் மனிதர்களை ஒரு நபர் கடித்து குதறி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் காய்கறி கடையில் வேலை செய்யும் சோனு என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரு நாய் கடித்து விட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் தற்போது அவர் வெறி பிடித்தவர் போல் சாலையில் நடமாடி வருவதும், சாலையில் போகிறவர்களை கடித்து குதறி வருவதுமான செயலில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.
சோனுவுக்கு நெருக்கமானவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவருக்கு நாய் கடி பாதிப்பால் ரேபிஸ் என்ற நோய் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவர் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதே சோனு மது அருந்துவதியதால் அவரது நிலைமை மேலும் மோசமானதாக இருக்கிறதாகவும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அவருக்கு நெருக்கமான உறவினர்கள் யாரும் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள மக்கள் தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாய் கடித்ததால், நாய் போலவே வெறியுடன் மனிதர்களையும் அந்த நபர் கடித்து வருவது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.