நடிகர் விஜயின் தவெக கட்சிக்கொடிக்கு வந்த இரண்டு சிக்கல்கள்… ஆரம்பமே இப்படி இருக்கே…

By Meena

Published:

தென்னிந்தியாவில் மிக முக்கியமான பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர். எனினும் தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நிர்வகித்து வருகிறார் நடிகர் விஜய்.

தவெக கட்சியின் ஆரம்ப கட்டமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் விஜய். ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் விஜய்.

இந்நிலையில் தற்போது தீவிர அரசியல் பணிகளில் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் இன்று தனது தவெக கட்சியின் கொடியை சென்னை பனையூர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். தவெக கட்சி கொடியை ஏற்றிய பின்பு உறுதிமொழி ஏற்று கட்சியின் பாடலும் என்று வெளியிடப்பட்டது. இன்று தவெக கட்சிக்கொடி அறிமுகமான நாளிலேயே இரண்டு சிக்கல்கள் அந்த கட்சி கொடிக்கு வந்துள்ளது.

அது என்னவென்றால், தவெக கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்று இருக்கும். அதே போல் பகுஜன் சமாஜ் கட்சி கொடியிலும் யானை இடம் பெற்று இருக்கும். அதனால் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியினர் எங்கள் கட்சிக்கொடியில் இருக்கும் யானை சின்னத்தை தவெக கட்சி கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. மேலும் தவெக கட்சி கொடியிலிருந்து யானை சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாது நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியின் நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருக்கும். அது பண்டைய காலத்தில் மன்னர்கள் போருக்கு சென்று வெற்றி பெற்று திரும்பியவுடன் வாகை மலர் சூடுவர். அதுதான் விஜயின் கட்சிக்கொடியில் இடம் பெற்று இருக்கிறது என்று பலர் நினைத்திருந்தனர். இந்நிலையில் இயற்கை ஆர்வலர்கள் இன்று, சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிக்காக சூடப்படும் வாகை மலரானது பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். தவெக கட்சி கொடியில் இடம் பெற்றிருக்கும் வாகை மலரானது தூங்குமூஞ்சி வகை எனப்படும் காட்டு வாகை மலராகும் என்று கூறியுள்ளனர். இந்த செய்தியும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தவெக கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாளிலேயே இத்தனை சிக்கல்களா என்று இணையவாசிகள் பேசி வருகின்றனர்.