MCR செருப்புகள் பாத வலியை போக்கும் என்பது உண்மையா?

பாத வலி இருப்பவர்கள் MCR செருப்புகள் அணிந்தால் வலி நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் இது உண்மையா என்பது குறித்து தற்போது பார்ப்போம். பொதுவாக வயதானவர்களுக்கு கால் பாதங்களில் வலி இருக்கும் என்பதும்…

mcr

பாத வலி இருப்பவர்கள் MCR செருப்புகள் அணிந்தால் வலி நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் இது உண்மையா என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

பொதுவாக வயதானவர்களுக்கு கால் பாதங்களில் வலி இருக்கும் என்பதும் அதனை தவிர்க்க MCR செருப்புகளை சில மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள் என்பதும் தெரிந்தது .

பாத வலி என்பது பாதங்களில் உள் கூட்டு தசைகளில் இருக்கும் வலியைத்தான் கூறப்படுவதுண்டு. ஒரு மனிதனின் உடலில் இருக்கும் மொத்த எடையையும் ஒரு காலில் இருந்து இன்னொரு காலுக்கு மாற்றுவதற்கு தேவையான எலாஸ்டிக் போல் இந்த உள்கூட்டு தசைகள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் வயது ஆக ஆக இந்த தசைகள் பலவீனம் ஆகும் போது தான் பாத வலியை உணர்வார்கள். எனவே பாத வலியின் தன்மை அறிந்து MCR செருப்புகள் அணிந்தால் வலி நிவாரணம் கிடைக்கும்.நீரிழிவு நோய், நரம்பு பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அவர்களுடைய தேவையை அறிந்து மருத்துவர்கள் சில சமயம் MCR செருப்புகளை பரிந்துரை செய்வது உண்மைதான்.

ஆனால் அனைத்து கால் வலிகளுக்கும் இந்த செருப்பு நிவாரணம் கொடுக்குமா என்றால் அது கண்டிப்பாக இருக்காது. எனவே பாத வலி, கால் வலி, மூட்டு வலி, தசை வலி ஆகியவை இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருத்துவர் பரிந்துரை செய்தால் மட்டுமே MCR செருப்புகள் அணியலாம் என்று கூறப்பட்டு வருகிறது.