சில நிகழ்ச்சிகள் திரைத்துறையில் நடக்கும்போது ஆச்சரியமாகத் தான் உள்ளது. ஒரு காமெடி நடிகருக்காகத் தயார் செய்த கதை எப்படி மாஸ் நடிகருக்குப் பொருந்தியது என்று பார்த்தால் ஆச்சரியமாகத் தான் உள்ளது.
அப்படி ஒரு கதை தான் இங்கும் நடந்துள்ளது. விஜய்க்குப் பொருந்துகிறதாம் வடிவேலுவுக்குத் தயார் செய்த கதை. அதையும் தான் பார்ப்போமே…
கைதி படம் மன்சூர் அலிகானுக்காகப் பண்ணின கதையாம். அப்புறம் கார்த்தி நடித்துள்ளார். அதே போல எழில் இயக்கத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படம் முதலில் வடிவேலுவுக்குப் பண்ணிய கதையாம். அதுல விஜய் நடிச்சிருக்காரு. இது பற்றி அந்தப் படத்தின் இயக்குனர் எழில் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
வடிவேலுவுக்காகப் பண்ணினோம். ஆரம்பத்துல சர்க்கரை தேவன்லாம் பண்ணும்போது அப்ப தான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்தேன். ராஜ்கிரண் சார்லாம் பழக்கம். அப்போ பண்ணலாம்னு பார்த்தோம். சரியான தயாரிப்பாளர் கிடைக்கல.
ஆனா வடிவேலு சாருக்கு ரொம்ப இம்ப்ரஸ் ஆன ஸ்கிரிப்ட் அது. அவரும் நிறைய தயாரிப்பாளர்களிடம் எல்லாம் ரெக்கமண்ட் பண்ணினாரு. ஆனா யாரும் அமையல. அந்தக் கதையையும் ஏத்துக்கல. வடிவேலுவையும் ஹீரோவாக்க ஒத்துக்கல.
அப்போ நண்பர்கள்லாம் சொன்னாங்க. நல்ல கதையை வந்து ஏன் வடிவேலுவுக்குப் பண்றே… அப்படியே ஒரு ஹீரோவுக்கு மாத்தலாமேன்னு சொன்னாங்க. சரி அப்புறம் வேற வழியில்ல. கொஞ்சம் கமர்ஷியலா அந்த ஸ்கிரிப்டை மாத்துனோம்.
அப்போ ரொம்ப அது வந்து ஆர்ட் பிலிம் மாதிரி தான் இருந்தது. கமர்ஷியலா மாத்துனதுக்கு அப்புறம் தான் அது போச்சு. அது ஆக்ஷன் கலந்த லவ்வர் ஹீரோ சப்ஜெக்ட். அதுக்குப் பிறகு அவர் கூட வாய்ப்பு வந்துருக்கும். ஆனா நான் தான் ரீமேக் படம் வேணான்னுட்டேன்.
பெண்ணின் மனதைத் தொட்டு விஜய் பண்ணிருக்க வேண்டிய படம் தான். எப்படியோ மிஸ் ஆச்சு. இப்போ அரசியலுக்குப் போறாரு. அடுத்து வந்தா பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1999ல் எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி உள்பட பலர் நடித்த சூப்பர் ஹிட் படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.
இந்தப் படத்தில் விஜய், சிம்ரன் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டாகும். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அத்தனைப் பாடல்களும் ஹிட்டாயின.