வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் பானிபூரி மிஷின்.. சுத்தத்திற்கு கேரண்டி..!

பானிபூரி சுகாதாரமற்ற முறையில் தயார் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் ஆட்டோமேட்டிக் பானிபூரி  மிஷின் வந்துவிட்டதை அடுத்து இனி சுத்தத்திற்கு கேரண்டி என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா…

panipoori

பானிபூரி சுகாதாரமற்ற முறையில் தயார் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் ஆட்டோமேட்டிக் பானிபூரி  மிஷின் வந்துவிட்டதை அடுத்து இனி சுத்தத்திற்கு கேரண்டி என்று கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் சுகாதாரத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதாகவும் பானிபூரிகளில் பயன்படுத்தப்படும் திரவம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று கூறப்படுவதை அடுத்து பானிபூரி கடைகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பெரிய கடைகளில் கூட சாப்பிடுவதற்கு பயமாக இருக்கிறது என்றும் சுகாதாரமற்ற முறையில், கையால் பானிபூரியை கொடுக்கிறார்கள் என்றும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரில் பானிபூரி ஆட்டோமேட்டிக் மிஷின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து பானிபூரி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மெஷினில் பூரி உருளைக்கிழங்கு பட்டாணியை ஒரு பைப் மூலம் நிரப்பும் கடை ஊழியர் அதிலிருந்து வெளியே வரும் பானி பூரி வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

நல்ல தரம், ஆரோக்கியம் மற்றும் சுத்தமாக இருக்கும் இந்த பானிபூரியை நம்பி சாப்பிடலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த பானிபூரி கடைக்கு பெங்களூர் மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருவதாகவும் கண்டிப்பாக இதேபோன்று அதிக இடங்களில் பானிபூரி மிஷின் நிறுவப்படும் என்றும் கூறப்படுகிறது.