தென்னிந்தியாவில் அதிகமுறை தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்… அவர் விருது வாங்கிய படங்களின் பட்டியல் இதோ…

By Meena

Published:

ஒரு படத்திற்கும் பாடலுக்கும் உயிர் கொடுப்பது இசைதான். அப்படி இசையால் மக்களை கட்டி போட்டவர்கள் ஒரு சிலரே. அதிலும் உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் எண்ணிக்கை குறைவுதான். அப்படி தென்னிந்தியாவில் அதிக அளவு தேசிய விருதை வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். அவரைப் பற்றியும் அவர் எந்தெந்த படங்களுக்கு இதுவரை இசையமைத்து தேசிய விருதினை வென்றுள்ளார் என்ற பட்டியலை இனி காண்போம்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இவரது இயற்பெயர் அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பதாகும். தனது தந்தை இறந்ததால் ஏ ஆர் ரகுமான் குடும்பம் வறுமைக்குள்ளானதால் சிறுவயதில் இருந்தே இசையை கற்று விளம்பரங்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார்.

1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது இந்தி ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தனது முதல் படமான ரோஜா திரைப்படத்தின் மூலமாகவே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் ஏ ஆர் ரகுமான். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான். நம் தமிழ்நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர் ஏ ஆர் ரகுமான்.

தனது சிறந்த இசையமைப்பிற்காக ஏழு தேசிய விருதுகள், ஆஸ்கார் விருது, கோல்டன் கிலோப் விருது பாப்ட்டா விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார் ஏ ஆர் ரஹ்மான். தற்போது எழுபதாவது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது அதில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பின்னணி இசை அமைத்ததற்காக ஏ ஆர் ரகுமானுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் 1992 ஆம் ஆண்டு ரோஜா, 1996 இல் மின்சார கனவு, 2001 ஆம் ஆண்டு லகான், 2002 ஆம் ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால், 2017 ஆம் ஆண்டு காற்று வெளியிடை ஆகிய படங்களின் பாடல்களுக்காக தேசிய விருதை வென்றார் ஏ ஆர் ரகுமான். இசைக்காக 2017 ஆம் ஆண்டு மாம் திரைப்படத்திற்கும், 2022 இல் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் விருதுகளை வென்றுள்ளார். மொத்தமாக தென்னிந்தியாவிலே அதிகப்படியாக ஏழு முறை தேசிய விருதை வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.