ஜம்மு காஷ்மீர் உள்பட 3 மாநிலங்களின் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின்படி ஜம்முகாஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதிம் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதி, 3ஆம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
அதேபோல் ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் முதற் தேர்தல் செப்டம்பர் 18ம் தேதி, 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதி, 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் தற்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே அந்த கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.