ஜெட் வேகத்தில் எகிறிய விமான கட்டணம்.. சென்னையிலிருந்து மதுரைக்கு எவ்ளோ தெரியுமா?

By John A

Published:

தொடர் விடுமுறையும் பண்டிகை நாட்களும் வந்து விட்டால் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆம்னி பேருந்து ஓனர்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும் குதூகலம் தான். அவர்கள் காட்டில் அடை மழைதான். பயணக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி சொந்த ஊருக்கு வரும் ஆசையே இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் மூன்று மடங்குவரை உயர்த்தி விடுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆம்னி பேருந்துகளில்தான் இந்த நிலைமை என்றால் தற்போது விமானப் பயணத்திலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களுக்கு விமானக் கட்டணம் 5,000 ரூபாய்க்குள் தான் இருக்கும்.

விண்வெளி ஆராய்ச்சியின் மற்றுமோர் மைல்கல்,, செவ்வாய் கிரகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தண்ணீர்

ஆனால் தற்போது நாளை சுதந்திர தினம் என்பதாலும், தொடர்ச்சியாக வார விடுமுறை என்பதாலும் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவர். ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் முடிவடைந்த நிலையில், தற்போது விமானக் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ. 4063-ல் இருந்து ரூ.11716 எனவும், திருச்சிக்கு ரூ.2382-ல் இருந்து ரூ.7192 ஆகவும், தூத்துக்குடிக்கு ரூ.4301-ல் இருந்து ரூ. 10796 ஆகவும், கோவைக்கு ரூ. 3369-ல் இருந்து ரூ. 5349 ஆகவும், சேலத்திற்கான கட்டணம் 2715-ல் ரூ. 8277ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் வழக்கமாக விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் பலர் மீண்டும் ஆம்னி பேருந்துகளையே நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.