சாலைகள் பிளந்து 70 வருடங்களாக வரும் தீ.. தீர்வுக்கே வழி இல்லாமல் ஊரையே அச்சுறுத்தி வரும் மர்மம்..

By Ajith V

Published:

என்னதான் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி புரட்சிகரமாக இருந்தாலும் இன்னும் பல இடங்களில் மர்மமான அல்லது பேய் தொடர்பான விஷயங்களைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டால் அது உண்மையோ பொய்யோ அதில் ஏதாவது நிஜம் இருக்கும் என்று ஒரு நம்பிக்கையை தான் கொண்டு வருகின்றனர். இதில் உண்மை தன்மை என்ன என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதில் இருக்கும் பின்னணி இந்த மக்கள் அனைவரையும் ஒரு நிமிடம் சில்லிடத்தான் வைக்கும்.

அந்த வகையிலான ஒரு செய்தியை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். பென்சில்வேனியாவில் உள்ள Centralia என்ற பகுதியில் தான் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மர்மம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய 14 நிலக்கரி சுரங்கங்களும், 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும் சென்ட்ராலியாவில் வாழ்ந்து வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில் 1960 களில் இங்கே இருந்து சில நிலக்கரி சுரங்கங்கள் சில காரணங்களால் மூடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி நடந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே தொடர்ந்து வாழ்ந்து வந்த போது தான் கடந்த 1962 ஆம் ஆண்டு எதிர்பாராத ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

நிலப்பகுதியில் ஏற்பட்ட தீ அங்கிருந்த நிலக்கரி சுரங்கத்திற்குள்ளே சென்று பாதித்ததுடன் மட்டுமில்லாமல் ஏறக்குறைய 1000 அடி கீழே வேகமாக பரவி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தீயை அணைப்பதற்காக முயற்சி செய்தும் அது பலனளிக்காமல் போக ஒட்டுமொத்த நிலக்கரி சுரங்கத்தையும் எரித்து விட்டது. இந்த தீ சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் நிலையில் இது அணைந்த பாடில்லை என்பதுதான் அந்த பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது

கடந்த 1980 ஆம் ஆண்டு பெனிசுலிவேனியாவில் இருக்கும் மக்கள் அனைவரையும் வெளியேற்றும் படி அறிவித்திருந்தனர். மேலும் உள்ளே தாது பொருட்கள் நிறைய இருப்பதால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பது விஷ வாயுக்களை உருவாக்கி அப்பகுதி மக்களை இன்னும் உடல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இன்னும் இந்த தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போவதால் பல தூரத்திற்கு அங்கே மக்கள் நடமாட்டமே இல்லாமல் போய் விட்டது. அதே போல, தொடர்ந்து தீ எரிவதால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் இடங்கள் இடிந்து விழும் அபாயமும் உருவாகி இருந்தது.

தீ பிடித்து புகை வருவதால் அங்கே வெப்ப அளவும் அதிகமாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக கைவிடப்பட்டு மக்களால் நடமாட்டமே இல்லாமல் இருக்கும் இந்த சென்ட்ராலியா பகுதி தீயை அணைப்பதற்கான முயற்சிகள் பலவாம் பலவற்ற போய் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் உள்ளே அந்த அளவுக்கு நிலக்கரி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால் தான் இன்னும் அணையாமல் எரிந்து கொண்டே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.