கோவை சரளா தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். எம்ஜிஆர் படங்களை பார்த்து வளர்ந்த கோவை சரளாவிற்கு சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் ஆதரவுடன் திரையுலகில் நுழைந்தார் கோவை சரளா.
அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. விஜயகுமார் மற்றும் கே ஆர் விஜயாவின் வெள்ளி ரதம் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் கோவை சரளா. பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் 15 வயது இருக்கும் போதே 32 வயதான கர்ப்பிணி பெண்ணாக நடித்த கோவை சரளா அடுத்ததாக ‘சின்ன வீடு’ என்ற படத்தில் பாக்யராஜுக்கு அம்மாவாக நடித்தார் இவ்விரு படங்களும் வெற்றி படமானதால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் கோவை சரளா.
பின்னர் ‘சதிலீலாவதி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘கரகாட்டக்காரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் கோவை சரளா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட படங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் துணை வேடங்களிலும் நடித்த கோவை சரளா தனது திரையுலகில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோவை சரளா.
நகைச்சுவை நடிகர்கள் பிரம்மானந்தம், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார் கோவை சரளா. குறிப்பாக தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ஹிட்டாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. தனது அபாரமான நடிப்பினால் அனைவரையும் எளிதில் சிரிக்க வைத்து விடுவார் கோவை சரளா.
தனது நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மூன்று முறை வென்றவர் கோவை சரளா. சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான இரண்டு நந்தி விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது ஆகியவற்றை வென்றுள்ளார் கோவை சரளா. வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார் கோவை சரளா. ‘அசத்தப்போவது யாரு’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி உள்ளார்.
கோவை சரளாவின் தனிப்பட்ட வாழ்க்கை எடுத்துக் கொண்டால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் உறவினர்களின் குழந்தைகளையே வளர்த்து வருகிறார். 40 வயதை கடந்த கோவை சரளா ஏன் திருமணம் இன்னும் செய்து கொள்ளவில்லை என்பதை பற்றி சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் நாம் இறக்கும்போது தனியாக தானே செல்ல போகிறோம் .அதே மாதிரி வாழும்போதும் தனியாகவே இருந்துவிடலாம். மேலும் எனக்கு சுதந்திரம் வேண்டும் அதனாலே எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. நான் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உடையவள். அதனால் என்னுடைய சிந்தனை முழுவதும் ஆன்மீகத்தில் இருக்கிறதனால் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததே இல்லை என்று ஓபனாக பேசி உள்ளார் கோவை சரளா.