ஏமாந்த எதிர்க்கட்சிகள்.. ஹிண்டன்பர்க் அறிக்கையால் எதுவும் நடக்கவில்லை.. பங்குச்சந்தை நிலவரம்..!

By Bala Siva

Published:

 

ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக பங்குச்சந்தை இன்று மிக மோசமாக சரியும் என்றும் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்றும் எதிர்பார்த்து காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பங்குச்சந்தை இன்று பெரிய அளவில் இறங்காமல் இருந்தது. இதனால் அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் ஏமாற்றமாக இருக்கலாம் ஆனால் முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செபி தலைவர் மாதபி புச் என்பவர் அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அதானியின் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கையை மையமாக வைத்து ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர் என்பதும் செபி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக இன்று பங்குச்சந்தை மிக மோசமாக சரியும் என்றும் குறிப்பாக அதானி   நிறுவனங்களின் பங்குகள் சரியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்த மாதிரி இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது ஓரளவு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்த நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதம் வரை சரிந்தன.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் பங்குச்சந்தை பாசிட்டிவாக வர்த்தகம் தொடங்கியது என்பதும் இன்று மதியம் 3.30 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் முடிந்த போது சென்செக்ஸ் வெறும் 56 புள்ளிகள் மட்டுமே குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கண்டுகொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் அதானி நிறுவனங்களின் பங்குகள் இன்று குறைந்திருந்தாலும் விரைவில் அதுவும் மீண்டும் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.