சமீபத்தில் 5000 கோடி ரூபாய் செலவு செய்து முகேஷ் அம்பானி தனது மகனுக்கு திருமணம் நடத்திய நிலையில் திடீரென 42,000 ஊழியர்களை தனது நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக இஷா அம்பானி கவனித்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் தான் அதிக அளவு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 60% ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருவதை அடுத்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் 5000 கோடி ரூபாய் செலவு செய்து தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி, 42,000 ஊழியர்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளார் என நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
42 ஆயிரம் ஊழியர்கள் தற்போது வேலை இன்றி நடுத்தெருவில் இருப்பதாகவும் ஒரே ஒரு திருமணத்திற்கு 5000 கோடி செலவு செய்து விட்டு 42,000 பேர் வாழ்க்கையில் விளையாடுவதா என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டும் இன்றி ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் 42000 பேர் வேலை இழந்தது மட்டுமின்றி புதிய வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகன் திருமணத்திற்கு ஜஸ்டின் பைபருக்கு மட்டும் 83 கோடி சம்பளம் கொடுத்து பாடவைக்கும் முகேஷ் அம்பானிக்கு 42 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.