வெள்ளையா மாறிய கருப்பு நாய்.. அதுவும் ரெண்டே வருசத்துல.. பலரையும் வியப்பில் ஆழ்த்திய பின்னணி..

By Ajith V

Published:

மனிதர்கள் பிறந்த பிறகு கூட வெயில் அல்லது வெப்பநிலை காரணமாக நிறம் மாறுவது வழக்கமான ஒன்றாகும். கருப்பாக இருக்கும் சிலர் பின்னாளில் நிறைய இயற்கை பொருட்களை பயன்படுத்தி நிறம் மாறுவதும், வெள்ளையாக இருப்பவர்கள் ஏதாவது சில காரணங்களுக்காக கருப்பாக நிறம் மாறுவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், நாய், பூனை என ஐந்தறிவு மிருகங்கள் நிறம் மாறுவதே சாதாரணமாக நிகழ்வாக இல்லாமல் மிக அபூர்வமான மற்றும் அரிதான விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு சூழலில், சுமார் இரண்டரை வருடங்களில் ஒரு நாயின் நிறம் மாறியதும் அதன் பின்னால் உள்ள காரணமும் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

US பகுதியில் உள்ள Oklahoma என்னும் இடத்தை சேர்ந்த நாய் தான் Buster. இந்த நாய்க்கு மனிதர்களுக்கு இருப்பது போல அரிதான நோய் இருப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சரியாக இரண்டரை வருடத்தில் இதன் நிறம் மாறிய சூழலில், இது பற்றி அதன் உரிமையாளர் கூறும் தகவலின் படி, இதற்கு ஒன்றரை வயது இருந்த போது தொடங்கிய நோய் தான் நிறம் மாற காரணமாக அமைந்துள்ளது.

Vitiligo என்ற நோய் தொற்று காரணமாக, நிறத்தின் உற்பத்தியாகும் மெலனோசைட்டுகள் படிப்படியாக அழிந்து தோலின் நிறம் மாறுவதாக தெரிகிறது. இதன் காரணமாக உடலின் முடி, கண் நிறம் என அனைத்தின் நிறம் மாறுவதுடடன் வெள்ளைத் திட்டுகள் தோன்றும் என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதன் மூலம் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், நிறம் மாறுவது சற்று வித்தியாசமான விஷயம் தான்.

அந்த வகையில் கருப்பாக இருந்த பஸ்டர் என்ற நாய், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளையாக மாறி உள்ளது. இதன் உரிமையாளரான மேட் ஸ்மித் என்ற நபர், கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் மெல்ல மெல்ல மாறியது தொடர்பான புகைப்படங்களை இணையத்திலும் பகிர்ந்திருந்தார்.

என்ன தான் நாயின் நிறம் மாறினாலும், அதன் உடல் எடையிலோ அல்லது அழகான பொழிவிலோ எந்தவித மாற்றங்களும் உருவாகவில்லை. அதே அழகுடன் நிறத்தில் மட்டுமே Buster என்ற நாய் வேறுபட்டிருக்க, பார்க்கும் பலரும் பல வியப்பான கருத்துகளையும் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதே போல, முன்பு இருந்ததை விட தற்போது நிறம் மாறிய பின்னரும் அதே அழகுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். கருப்பில் இருந்து இரண்டரை வருடத்தில் வெள்ளை நிறத்தில் மாறிய நாய் குறித்து அறிந்த பலரும் ஆச்சரியத்தில் உறைந்து தான் கிடக்கின்றனர்.