இஸ்ரேல் செல்லும் விமானங்களை நிறுத்திய ஏர் இந்தியா.. போர் பதற்றம் காரணமா?

By Bala Siva

Published:

இஸ்ரேல் மற்றும் ஏரா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஈரானில் வைத்து அவர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகி இருப்பதாகவும் தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே எந்த நேரத்திலும் போர் தொடங்கலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக துணை நிற்போம் என்று பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கூறியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் ’மத்திய கிழக்கின் சில நாடுகளின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சில நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இஸ்ரேல் நாட்டின் சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் என்றும் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த தகவல்களை பெறுவதற்கு 011-69329333 / 011-69329999  என்ற எண்களில் அழைக்கலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Tags: air india, isreal, war