இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் என்பது இன்றியமையாதது என்ற நிலையில் சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடலாம் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் இன்றைய இளைஞர்களின் நிலையாக உள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் வயதானவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் கூட பெரிய பாதிப்பு இருக்காது என்றும் ஆனால் குழந்தைகள் அதிக அளவு ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மனித மூளை என்பது குழந்தை பருவத்தில் 40% மட்டுமே வளரும், அதன் பிறகு மீதம் உள்ள 60% வளர்ச்சி படிப்படியாக வளரும் என்பதும், 18 வயது ஆகும்போதுதான் கிட்டத்தட்ட மூளை முழு வளர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 9 முதல் 18 வயதான குழந்தைகள் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் இள வயதில் ஏற்படும் இந்த பாதிப்பு அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கு அபாயம் உண்டு என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகள் அதிக அளவு ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருக்க பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி ஸ்மார்ட் போனால் அதிகம் பாதிக்கப்படுகிறது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி அதிக அளவு செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் கண் பார்வை குறைபாடும் ஏற்படுகிறது என்றும் பெரும்பாலான குழந்தைகள் தற்போது கண்ணாடி அணிவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கண் மருத்துவர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டும் இன்றி ஒரே கோணத்தில் ஸ்மார்ட்போனை மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பதால் கழுத்து வலி, முதுகு வலி உள்ளிட்ட பிரச்சனைகளும் சிறு வயதிலேயே ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன் என்பது கிட்டத்தட்ட மனிதனை ஒரு போதை போல ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் தினமும் மணிக்கணக்கில் ஸ்மார்ட் ஃபோனில் செலவு செய்வதால் அதற்கு அடிமையாகும் அபாயமும் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தி வழக்கப்படுத்திய பின்னர் ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டால் மூளை பயங்கரமாக பாதிப்பு அடைத்து விடும் என்றும் எனவே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.