அஜீத்தும், ஏ.ஆர். ரஹ்மானும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி இருப்பாங்க.. கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சீக்ரெட்…

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எப்பொழுதும் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற பெயரைப் பெற்றவர். ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, என பல முன்னனி நட்சத்திரங்களைக் கொண்டு கமர்ஷியல் சினிமா எடுப்பதில் கைதேர்ந்தவர். குறிப்பாக சரத்குமாருடன்…

KS Ravikumar

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எப்பொழுதும் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற பெயரைப் பெற்றவர். ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, என பல முன்னனி நட்சத்திரங்களைக் கொண்டு கமர்ஷியல் சினிமா எடுப்பதில் கைதேர்ந்தவர். குறிப்பாக சரத்குமாருடன் அதிக படங்கள் பணியாற்றியவர். அதனாலலேயே இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதற்குக் காரணம் விறுவிறு திரைக்கதை, காமெடி, எமோஷனல், இசை, பாடல்கள் என அனைத்தும் கலந்து தருபவர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அஜீத்தை வைத்து வில்லன், வரலாறு ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். இந்த இரு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக வரலாறு வரலாற்று வெற்றியைப் பெற்றது. இதில் இசை ஏ.ஆர். ரஹ்மான். கே.எஸ்.ரவிக்குமார் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் முத்து திரைப்படத்திலிருந்து படையப்பா, கோச்சடையான், லிங்கா என பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவருடனும் நெருங்கிப் பழகிய கே.எஸ்.ரவிக்குமார் இருவருக்குள்ளும் ஓர் விஷயத்தில் ஒரே ஒற்றுமை உள்ளது என பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதாவது முன்னுரிமை கொடுப்பது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது. தான் என்ன சொல்லுகிறோமோ அதுபோலவே நடந்து கொள்வார்களாம். மேலும் இருவரது சிந்தனையும் ஒரே மாதிரித்தான் இருக்குமாம்.

எஸ்.பி.பி-க்குப் போன் செய்த எம்.எஸ்.வி., ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் நடந்த அந்த ஒரு நிகழ்வு

ஒன்றைக் கூறிவிட்டால் அது போலவே நடந்து கொள்வார்களாம். படையப்பா படத்தின் இசையமைக்கும் பணிக்காக கே.எஸ்.ரவிக்குமாரை ஒரு குறிப்பிட்ட தேதியில் வரச்சொல்லியிருந்த நிலையில், அந்த நேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் ரஹ்மான் ஸ்டுடியோ வர அங்கு லகான் படத்திற்காக அமீர்கானும் மற்றும் பாரதிராஜாவும் காத்திருந்தார்களாம்.

கே.எஸ்.ரவிக்குமாரைக் கண்டதும் ரஹ்மான் அவரை வரச் சொல்லி கிக்கு ஏறுதே பாடலைப் பதிவு செய்திருக்கிறார். ஏனெனில் அவர்கள் இருவரும் திடீரென ரஹ்மானைச் சந்திக்க வந்தவர்கள். ஆனால் ரஹ்மான் கே.எஸ்.ரவிக்குமாருக்கு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி வரச்சொல்லிவிட்டதால் அந்தப் பணி முடிந்த பின்னரே அமீர்கானையும், பாரதிராஜாவையும் சந்தித்திருக்கிறார்.