தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு தனி இலக்கணம் வகுத்தவர் இசையமைப்பாளர் தேவா. விஜய், அஜீத், பிரசாந்த் என முன்னணி நடிகர்கள் அனைவருக்கம் தனது சூப்பர் ஹிட் பாடல்கள் மூலமாக முகவரி கொடுத்தவர். மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கும் மாஸ் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
தேனிசைத் தென்றால் தேவா 1995-க்குப் பின் கானா பாடல்களை பாடத் தொடங்கினார். சென்னையின் கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கும் கானா பாடல்களுக்கு வரவேற்பு அதிகமாக தேவாவின் கானா என்ற மியூசிக் ஆல்பமே பட்டையைக் கிளப்பியது.
இப்படி தேவாவின் இசை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக சமீபத்தில் லியோ படத்தில் கூட கரு.. கரு..கருப்பாயி பாடலும் மீண்டும் ஹிட் ஆகி சோஷியல் மீடியாக்களில் வைரலானது. இந்நிலையில் தேவாவின் அடுத்த பாடல் ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமையே அதிர வைக்கிறது.
சுபாஷ் இயக்கத்தில் கடந்த 1999-ல் வெளிவந்த திரைப்படம் தான் நினைவிருக்கும் வரை. பிரபுதேவா, விவேக், கீர்த்தி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் கானா பாடல்தான் காத்தடிக்குது.. காத்தடிக்குது என்ற பாடல்.
என்னோட காலை எடுக்கணும்ன்னு சொன்னாங்க.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய விக்ரம்..
பிரபுதேவாவின் அசத்தல் நடனத்தில் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பாடல் அது. தற்போது இந்தப் பாடல் ரீமேக் செய்யப்பட்டு இணையத்தையே அலற வைக்கிறது. இன்ஸ்ட்டா பக்கத்தில் இந்தப் பாடலைக் கடந்து யாரும் செல்லமுடியாதபடி ரீல்ஸ் மழையாகக் கொட்டுகிறது. இந்தப் பாடலை ஆஃப்ரோ மற்றும் பால் டப்பா ஆகிய இருவரும் சேர்ந்து ரீமேக் செய்து யூடியூப் தளத்தில் வெளியிட சில நாட்களில் வைரல் ஆனது.
தாங்கள் எடுத்துள்ள இந்தப் பாடலை தேனிசைத் தென்றல் தேவாவிடம் காட்டி அவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்கள் இந்த டீம். தற்போது இந்தப் பாடலை டீவி பிரபலங்கள், ரியாலிட்டி ஷோ பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஸ்டைலுக்கு ரீல்ஸ்களாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்குகளை அள்ளிக் குவிக்கின்றனர்.