ஓய்வு பெறுகிறாரா அதானி? நிர்வாக பொறுப்பை ஏற்பவர்கள் யார்?

ந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி விரைவில் ஓய்வு பெற இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனது வாரிசுகளிடம் தொழில் நிர்வாகத்தை ஒப்படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கு…

கவுதம் அதானி

ந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி விரைவில் ஓய்வு பெற இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனது வாரிசுகளிடம் தொழில் நிர்வாகத்தை ஒப்படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கு தற்போது 62 வயதாகும் நிலையில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிமெண்ட், சூரிய ஆற்றல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தமான கௌதம் அதானி சொத்து மதிப்பு 213 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 62 வயதான கௌதம அதானி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தனது வயது காரணமாக இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருப்பதாகவும் தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மருமகன்களிடம் நிர்வாகத்தை பிரித்து ஒப்படைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வாரிசுகளிடம் பொறுப்பை  ஒப்படைக்க இதுதான் சரியான நேரம் என்றும்  இரண்டாவது தலைமுறையினர்களிடம் நம்பிக்கையுடன் எனது பொறுப்பை ஒப்படைக்க நான் முடிவு செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது 2 மகன்கள் மற்றும் 2 மருமகன்கள் இணைந்து அதானி குழும நிறுவனங்களை நடத்தலாம் என்றும் இல்லாவிட்டால் நான்காக பிரித்து நடத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எனது நான்கு வாரிசுகளும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்றும் இரண்டாம் தலைமுறையினர் தொழில் வளர்ச்சியில் ஆர்வத்தை காட்டுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அதானி பாரம்பரியத்தை வலுவாக கட்டமைக்க அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அதானி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.