இனி குழந்தைகள் காணாமல் போக வாய்ப்பே இல்லை.. வருகிறது புதுவித ஆப்பிள் வாட்ச்..!

By Bala Siva

Published:

குழந்தைகளுக்கான புதிய ஆப்பிள் வாட்சை வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இனி குழந்தைகள் தொலைந்து போவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது குழந்தைகளுக்கான புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாட்சை உங்கள் குழந்தைகள் கையில் கட்டி விட்டால் குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம் என்பதும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? யாருடன் போனில் பேசியிருக்கிறார்கள்? அவர்களது உடல் நலம் எப்படி இருக்கிறது? உடற்பயிற்சி செய்கிறார்களா? என்பதை அனைத்தையுமே பக்கத்தில் இருந்து கண்காணிப்பது போல் தூரத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்கள் குழந்தைகளின் அன்றாட தகவல்கள், போன் அழைப்புகள் அனைத்தையும் இந்த ஆப்பிள் வாட்ச் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த அம்சத்திற்காக ஆப்பிள் நிறுவனம் ஜியோ உடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் இந்த ஆப்பிள் வாட்சில் ஜியோ இணைப்பை பெற்றுக் கொண்டால் பெற்றோரில் யாராவது ஒருவர் ஐபோன் வைத்திருந்தால் அவர்கள் அந்த குழந்தையுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு உரிய சுதந்திரத்தை கொடுக்கும் என்றும் அதே நேரத்தில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்கவும் அனுமதிக்கவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் வாட்சில் இருந்து குழந்தைகள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்? யாருக்கு போன் செய்கிறார்கள்? என்னென்ன படிக்கிறார்கள்? அவர்களது உடல் நலத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் என்பதும் குழந்தைகளின் இருப்பிடத்தையும் ஐபோனிலிருந்து கண்காணித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குழந்தைகள் தெரியாமல் வேறு இடத்துக்கு தவறி சென்று விட்டால் கூட அவர்களை கண்டுபிடிப்பது மிகவும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ இணைப்புடன் கூடிய இந்த ஆப்பிள் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.