ரஜினி மாறுவேஷம் போட்டுக் கொண்டு தியேட்டர்ல பார்த்த படம் இதுதானாம்…! அட அது சூப்பர்ஹிட் படமாச்சே…!

By Sankar Velu

Published:

பிரபலமானாலே பெரிய சிக்கல் இதுதான். ஒரு இடத்திற்கும் சுதந்திரமா போக முடியாது. வர முடியாது. சூப்பர்ஸ்டார் ரஜினியைப் பொருத்தவரை அவர் ரொம்பவே எளிமையானவர். அவருக்கு இந்த மாதிரியான சிக்கல் அதிகமாகவே இருக்கும்.

அப்படி இருக்கும்போது அவருக்கும் சாதாரண ரசிகனுக்கு உள்ள ஆசை இருக்கத் தானே செய்யும். அப்படித்தான் நண்பர்கள் சூர்யாவின் காக்க காக்க படத்தைப் பற்றி சொல்லும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக மாறுவேடத்தில் படம் பார்க்கச் சென்றாராம் ரஜினி. ஆச்சரியம் தான் என்றாலும் அதுதானே உண்மை. அந்த விஷயத்தைப் பற்றி ரஜினியே ஒரு முறை விழா ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

ரஜினிகாந்த் சாமி பட விழாவில் விஜயைப் பற்றி இப்படி சொன்னார். அப்போது விஜய், சூர்யா பற்றி எல்லாம் இப்படி சொன்னது ஆச்சரியமாகத் தான் இருந்தது. வசீகரா படத்தைப் பார்த்தேன். என்ன ஒரு ஹியூமர்? இது விஜய் பண்ணது தானான்னு ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அவருக்கெல்லாம் பெரிய இடம் இருக்குது. ஒரு ஐபிஎப் ஆபீசர் எப்படி இருக்கணும்கறதை வந்து நான் ‘காக்க காக்க’ படத்துல தான் பார்த்தேன். பெங்களூருல இருந்தேன். நண்பர்கள்லாம் சூர்யா படம் வந்துருக்கு. நல்லாருக்குன்னு சொன்னாங்க. நாங்க அப்போ எல்லாம் மாறு வேஷம் போட்டுக்கிட்டுத் தான் போவோம். போனேன்.

Kakka kakka
Kakka kakka

படம் ரொம்ப அருமையாக இருந்தது என்றார் ரஜினிகாந்த். இந்தத் தலைமுறையினர் அத்தனை பேரும் பொறாமைப்படாத நடிகர்கள் யார்னா ரஜினி, கமல் இருவரும் தான். இன்றைய இளைஞர்கள் எல்லாரும் சுறுசுறுப்பாக நடிச்சிக்கிட்டு இருக்காங்க.

நாம ஏன் நடிக்கக்கூடாதுன்னு யோசிச்சி நடிக்க ஆரம்பிக்கிறார். அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் சொல்கிறார். ஜக்குபாய் கதை ரெடியாகிறது. பேப்பர்ல விளம்பரம் போட்டாச்சு. இதுல ‘இறைவா என் நண்பர்களை நீ பார்த்துக்கொள். என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’னு போட, அது பயங்கரமா ரீச்சாயிடுது. இந்த டயலாக் வேற யாருக்காவது வார்னிங் கொடுக்கிறாரான்னு பேசப்படுகிறது.

இந்தக் கதையை என்னதான் நாம ஆல்ட்ரேட் பண்ணி எடுத்தாலும் திரும்பவும் படையப்பா சாயல் தான் வருதுன்னு ரஜினி சொல்ல, அந்தப் படம் டிராப் ஆகிறது. அந்தப் படத்துப் போஸ்டரோட டிசைனே வித்தியாசமா இருந்தது. அதன்பிறகு தான் ரஜினி கதையின் மீது ரொம்பவும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

ஜக்குபாய் படம் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2010ல் சரத்குமாரை வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமாருடன் இணைந்து ஸ்ரேயா, ஸ்ரீஷா, கவுண்டமணி, ரிச்சார்டு ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.