இனி சினிமா டிக்கெட்டும் ரிசர்வ் செய்யலாம்.. ஜொமேட்டோ அறிமுகம் செய்த புதிய செயலி..!

By Bala Siva

Published:

ஜொமோட்டோ நிறுவனம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் முன்னணியில் இருக்கும் நிலையில் தற்போது புதிய செயலியை அறிமுகம் செய்திருப்பதாகவும் இந்த செயலி மூலம் சினிமா டிக்கெட் ரிசர்வ் செய்வது உள்பட பல பணிகளை செய்து முடிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஜொமோட்டோ நிறுவனம் இன்று முதல் ’டிஸ்ட்ரிக்ட்’ என்ற புதிய செயலியை ஆரம்பித்துள்ளது. இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்வது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்வது, மேலும் நேரடி நிகழ்ச்சிகள், ஷாப்பிங் செய்தல், தங்குமிடங்களை முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ஜொமேட்டோ இருக்கும் நிலையில் தற்போது தனது வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் புதிய இந்த டிஸ்ட்ரிக்ட் என்ற செயலியை தொடங்கியுள்ளது என்பதும் இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

district

உணவு டெலிவரி செய்வது மட்டுமின்றி எந்தெந்த உணவகத்தில் எந்தெந்த உணவுகள் ஸ்பெஷல், விளையாட்டு டிக்கெட்டுகள், திரைப்பட டிக்கெட்டுகள், இசை நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை பார்க்க வாங்கும் டிக்கெட் உட்பட அனைத்து பணிகளையும் இந்த ஒரே செயலியில் செய்யலாம் என்று ஜொமேட்டோ நிறுவனத்தின் கோயல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை புக் மை டிக்கெட் என்ற செயலி தான் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் 60% பங்கை கொண்டுள்ளது என்றும் தற்போது போட்டிக்கு ஜொமோட்டோ நிறுவனம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.