ஜூலையில் மட்டும் 8000 ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு.. இந்தியாவில் மட்டும் இத்தனை பேர்களா?

  ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார் கை நிறைய சம்பளம் வாங்கலாம், ஜாலியாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் எப்போது வேலை போகும் என்ற ஆபத்துடன் தான் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள் என்பது…

layoff

 

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார் கை நிறைய சம்பளம் வாங்கலாம், ஜாலியாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் எப்போது வேலை போகும் என்ற ஆபத்துடன் தான் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு பிறகு பல பெரிய ஐடி கம்பெனியில் இருந்து கூட ஏராளமானோர் வேலை இழந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த ஜூலையில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 8000 பேர் வேலை இழந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 600 வேலை இழந்தவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் வேலை இழந்து வருபவர்களை எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதில் சேர்வதால் வேலை இல்லா திண்டாட்டம் உலகம் முழுவதுமே தலைவிரித்து ஆடுவதாக கூறப்படுகிறது.

ஐடி நிறுவனங்களின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து சிக்கன நடவடிக்கைக்கு முதலில் கை வைப்பது வேலை நீக்க நடவடிக்கைதான் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே தான் ஒவ்வொரு மாதமும் ஐடி நிறுவனங்களில் வேலை இழப்பவர்களை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் 8000 பேர் வேலை இழந்து இருப்பதாகவும் அதில் 600 பேர் இந்தியர்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதிகமான நபர்களை பணியில் எடுத்தது, ஊழியர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தாமல் இருப்பது, வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராதவர்கள், வேலையில் கவனம் செலுத்தாதவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதாகவும் நிச்சயமாக ஒரு நல்ல ஊழியரை வேலையில் இருந்து நீக்க மாட்டோம் என்றும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூலையில் மட்டும் வேலையில் இருந்து வேலையில் இருந்து நீக்கிய நிறுவனங்களின் பட்டியல் எதோ

UKG :2,200
Intuit Inc 1,800
Open Text 1,200
Redbox 100
Unacademy 250
WayCool 200
PocketFM 200
Koo 200