உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…

By Meena

Published:

நுரையீரல் புற்றுநோயானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொல்லும் மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்பது மார்பு வலி, இரத்தத்துடன் கூடிய இருமல், மூச்சுத்திணறல் மற்றும் எடை இழப்பு ஆகியவை அடங்கும். நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று புகையிலை நுகர்வு.

நூரையீரல் புற்றுநோயிக்கான முதல் காரணம் புகையிலை நுகர்வு என்றால் இரண்டாவது காரணம் காற்று மாசுபாடு. இந்தியாவில், தீங்கு விளைவிக்கும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் மாசுபட்ட காற்றின் வெளிப்பாடு காரணமாக நுரையீரல் புற்றுநோய் மிகவும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், உலக நுரையீரல் புற்றுநோய் தினம், இந்த நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை ஆராயவும் அனுசரிக்கப்படுகிறது.

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2024: தேதி
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2024: வரலாறு
2012 ஆம் ஆண்டில், சர்வதேச சுவாச சங்கங்களின் மன்றம் (FIRS) மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆய்வுக்கான சர்வதேச சங்கம் (IASLC) இணைந்து இந்த உயிர்கொல்லி நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நாம் மாற்ற வேண்டிய பழக்கவழக்கங்களையும் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவே இந்த நாளின் நோக்கம் ஆக கொண்டு ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினமாக அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டது.

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2024: தீம்
இந்த ஆண்டு உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் – பராமரிப்பு இடைவெளியை மூடு: புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகல் அனைவருக்கும் தகுதியானது என்பதாகும்.

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் 2024: முக்கியத்துவம்
நுரையீரல் புற்றுநோயை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் – சிறிய அல்லாத செல் நுரையீரல் புற்றுநோய் (NSCLC) மற்றும் சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் (SCLC). ஒவ்வொரு ஆண்டும், உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தில், நுரையீரல் புற்றுநோயின் எவ்வாறு ஆபத்து விளைவிக்கும், தடுப்பு குறிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சை விருப்பங்கள் ஆகியவை விவாதிக்கப்படுகின்றன. நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நாள் மக்கள் ஒன்று கூடி, புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்றுவதற்கான வழிகளை ஆராய்வதற்கான வாய்ப்பாகவும் செயல்படுகிறது.