ஆடிப்பெருக்கு அன்று வழிபடுவதுல இவ்ளோ விஷயம் இருக்கா? அது ஏன் 18லயே தான் கொண்டாடணுமா?

By Sankar Velu

Published:

ஆடிப்பெருக்கு நாளை மறுநாள் (3.8.2024) சனிக்கிழமை அன்று வருகிறது. ஆடி 18ம் நாளைத் தான் நாம் ஆடிப்பெருக்காகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் தாலிக்கயிறு மாற்றுவது எப்படி, வழிபடுவது எப்படின்னு பார்ப்போமா…

இந்த உலகமே பஞ்சபூதங்களால் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அவற்றில் நீர் என்பது ஒன்று. ‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவரே தெரிவித்துள்ளார். உலக இயக்கத்திற்கும், மனிதர்களின் இயக்கத்திற்கும் மிக முக்கியமானது தண்ணீர். அதை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு வருவதால் தான் நதிகளுக்குப் பூஜை செய்கிறோம். நதிகளில் புனித நீராடி கடவுளை வழிபடுகிறோம்.

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் ஒரு கேள்வி எழுகிறது. அது ஏன் 18ம் தேதி தான் செய்யணுமான்னு. பொதுவாக விவசாயம் செய்யும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவர்கள் தான் நாம் எல்லாருமே.

நம் முன்னோர்கள் கண்டிப்பாக விவசாயம் தான் செய்து வந்து இருப்பார்கள். அவர்கள் விவசாயத்துக்கு எப்போ தண்ணீர் வரும்னு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருப்பார்கள்.

ஆடிக் கொடிக் கட்டியாச்சுன்னா அதை அவிழ்க்கறதுக்குள்ள கண்டிப்பாக மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அப்படி ஆடி மாசம் கொடியேற்றி காப்பு கட்டி அம்பாளுக்குத் திருவிழா தொடங்கின உடனே எல்லா இடங்களிலும் மழை பெய்து நீர் பெருகி எல்லா இடங்களிலும் சேர்ந்து காவிரி ஆற்றில் பெருந்திருளாக வந்து அவங்கவங்க இடத்துக்கு வந்து காவிரி ஆற்றில் எப்போ நீர் வரும்னு காத்துக்கிட்டு இருப்பாங்க.

Aadiperuku
Aadiperuku

அப்படி அந்த நீர் வரும் நாள் 15 அல்லது 16வது நாளாக அமைந்ததால் பெரியவர்கள் இந்த நாளை ஆடி 18ஆக வைத்துக் கொண்டாடினார்கள். அதுவே ஆடிப்பெருக்காகிறது.

மழைத்தண்ணீரே இல்லாமல் ஆடிப்பெருக்கை எப்படி கொண்டாடுறது? அதனால மழை பெய்து நீர் நிரம்பி ஏரி, குளம், ஆறு, குட்டைகள் என அனைத்தும் நிரம்பி நிற்கும் காலம் தான் ஆடிப்பெருக்கு.

அப்படி எல்லா இடங்களிலும் தண்ணீர் பெருக நம் முன்னோர்களுக்கு 18 நாள்கள் வரை தேவைப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த 18ம் நாளை ஆடிப்பெருக்காகக் கொண்டாடுகிறோம்.

இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல. எல்லா தொழில் துறையினருக்கும் இது உகந்த நாள். அதனால் தான் காவிரித் தாயிடம் போய், விவசாயம் செழிக்க வேண்டும். அவர்கள் செழிப்பாக இருந்தால் தான் எல்லா துறையினரும் செழிப்பாக இருக்க முடியும்.

எங்க வீட்டில் மங்கல காரியங்கள் நடக்க வேண்டும். தொழில் சிறக்க வேண்டும். குடும்பத்தில் எல்லா நிகழ்வுகளும் நடக்கட்டும். பிள்ளைகளுக்குத் திருமணமாகணும். அவங்களுக்கும் எல்லா நன்மைகளும் நடக்கணும்.

அதனால எல்லாத்துக்கும் அருள் பண்ணுன்னு வேண்டுகிற நாள் தான் இந்த ஆடிப்பெருக்கு. காவிரிக்கரையில் இந்த ஆடிப்பெருக்கு அன்று சகலவிதமான தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

என்னை நோக்கி யார் வரலைன்னாலும் அவர்களை நோக்கி நானே வந்து இந்த நாளில் அவர்களுக்கு நான் வந்து அருள்கிறேன் என்கிறார். அதனால் எங்கு இருந்தாலும் ஒரு கலசத்தில் நீர் நிரப்பி 2 பூ போட்டால் அதில் காவிரி தாய் இருப்பாள்.

அதற்கு நாம் பூஜை செய்தால் போதும். இன்றைய நாளில் தாலிச்சரடை மாற்றிக் கொள்ளலாம். அன்று காலை 7.35 மணி முதல் 8.50 மணிக்கள், 10.35 மணி முதல் 11.55 மணி வரையும் தாலிச்சரடை மாற்றிக் கொள்ளலாம்.

அன்றைய தினம் யாருக்காவது அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. அந்த அன்னம் ஆனது நமக்குப் பெருகும். வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்தரும்.

மேற்கண்ட தகவல்களை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.