300 அடி பள்ளம்.. சட்டென தடுமாறிய இன்ஸ்டா பிரபலத்துக்கு நேர்ந்த கதி.. சோகத்தில் நெட்டிசன்கள்..

By John A

Published:

மகாராஷ்டிரா : சோஷியல் மீடியாக்கள் தான் இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. பாத்ரூமில் கூட ரீல்ஸ் பார்த்துக் கொண்டே தான் காலைக் கடன்களை முடிக்கின்றனர். அந்த அளவிற்கு இளம் வயதினர் வாழ்க்கையில் ஒன்றிப் போன சோஷியல் மீடியாக்களால் ஒருபுறம் தங்களது திறமையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதே நேரம் பல சோக சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. ரீல்ஸ் மோகத்தில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இன்றி பல அசம்பாவிதங்கள் நடைபெற்று உயிரிழப்புகள் வரை செல்கிறது.

காவல் துறை பல முறை எச்சரித்தும் இவர்கள் திருந்திய பாடில்லை. அண்மையில் ஒரு சிலர் பல மாடிக் கட்டடித்தில் முறையான பாதுகாப்புகள் ஏதுமின்றி தொங்கியபடியே ரீல்ஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. கொஞ்சம் அசந்திருந்தால் 3 உயிர்கள் பறிபோய் இருக்கும். தற்போது இதே போன்று ஒரு சோக சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் அன்வி காம்தர்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருப்பவர். ரீல்ஸ் எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர். தான் செல்லும் இடங்கள், மலைப் பகுதிகள், இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கே ரீல்ஸ் எடுத்துப் போடுவது இவரின் பிரதான பொழுதுபோக்கு. இவரை சுமார் 2 இலட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

யானையையே மிரள வைத்த நடிகர் திலகத்தின் அசுரத்தனமான நடிப்பு.. சரஸ்வதி சபதம் படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு

இந்நிலையில் வழக்கம் போல் இன்ஸ்ட்டா ரீல்ஸ் எடுப்பதற்காக மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தன் விதி முடியப் போகிறது என்பதை அறியாது அங்கே உள்ள உயரமான மலைப்பகுதியில் சென்று ரீல்ஸ் எடுத்திருக்கிறார்.

அப்போது எதிர்பாரா விதமாக 300 அடி கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு பல போராட்டங்களுக்குப் பிறகு மீட்புப் படையினர் அவரை மீட்டனர். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

ரீல்ஸ் மோகத்தால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகமாகி வரும் வேளையில் பல முறை எச்சரித்தும் லைக்குகள் மற்றும் வியூஸ்களுக்குக்காக தங்களது உயிரைப் பணயம் வைத்து இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். இது குறித்த விழிப்புணர்வு அதிகம் வர வேண்டும் என்றும், அரசு இதற்குக் கடிவாளம் போட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.